DMK Government
படுதோல்வியை உணர்ந்து சாவடியில் இருந்து ஓட்டம்பிடித்த பாஜகவினர் - கேரள தேர்தலில் நடந்த சுவாரஸ்யம்!
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில், ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரனை முதல்வர் வேட்பாளராக அறிவித்த பா.ஜ.க., வாக்குப் பதிவு நாளன்று பல இடங்களில் காணாமல் போனது. கேரளத்தில், வலுவான மும்முனைப் போட்டி நடந்த ஒரு சில தொகுதிகளைத் தவிர, பெரும்பாலான இடங்களில் பா.ஜ.க. முகவர்கள் பாதியிலேயே வாக்குச்சாவடிகளைக் காலி செய்துவிட்டுக் கிளம்பினர்.
மேலும் பல இடங்களில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு (யுடிஎப்) ஆதரவாக செயல்பட்டனர். கலமாசேரியில், யு.டி.எப். உடன் பா.ஜ.க. மறைமுக ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஏற்ப, வாக்குப் பதிவு நாளில் பா.ஜ.க. முற்றிலும் போட்டியிலிருந்து விலகியது. கொல்லம் மாவட்டத்தில், கருநாகப்பள்ளி, இரவிபுரம், கோட்டாரக்கரா, கொல்லம் மற்றும் குண்டறா தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கிய போதே பா.ஜ.க. முகவர்கள் வெளியேறினர்.
Also Read: “பாலின சமத்துவத்தை பாதுகாக்கும் கேரளா” : ‘Gender Park’ திட்டத்தை தொடங்கி வைத்த பினராயி விஜயன் !
கருநாகப் பள்ளியில், ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான பா.ஜ.க. வாக்குகள் அப்படியே யு.டி.எப்.-க்கு திருப்பி விடப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா போட்டியிடும், ஆலப்புழா மாவட்டத்தின் ஹரிபாடு தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு முகவர்களை பா.ஜ.க. திரும்பப் பெற்றது. காயம் குளத்தில் பா.ஜ.க.-வின் கோட்டை என்று கூறப்படும் பத்தியூர், கண்டலூர் மற்றும் தேவி குளங்கராவிலும் முகவர்கள் யாரும் இல்லை.
கடுமையான போட்டி நிலவிய மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் தொகுதியிலும் பல பஞ்சாயத்துகளில் பா.ஜ.க.வுக்கு பூத் முகவர்கள் இல்லை. கண்ணூர் மாவட்டத்தில், பா.ஜ.க. வேட்பாளர் இல்லாத தலசேரி, அழிக்கோடு, கண்ணூர், கூத்துப்பரம்பு, பேராவூர் தொகுதிகளிலும், கோட்டயத்திலும் யு.டி.எப். உடன் பா.ஜ.க. கூட்டு சேர்ந்தது. இதே போல திருச்சூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், பா.ஜ.க.வுக்கு சாவடிகளில் முகவர்கள் இல்லை.
பா.ஜ.க. வேட்பு மனுவை நிராகரித்த குருவாயூர் தொகுதியில் இது இன்னும் தெளிவாகத் தெரிந்தது. நடிகரும், பா.ஜ.க. வேட்பாளருமான சுரேஷ்கோபி ஒரு சில சாவடிகளை பார்வையிட்ட கையோடு காலையிலேயே திருவனந்தபுரத்திற்கு திரும்பினார். குமரகத்தில், பா.ஜ.க. பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் யு.டி.எப். வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாகவே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனால், கேரளத் தேர்தல் வழக்கம்போல இரு முனைப்போட்டியாகவே அமைந்தது.
Also Read
-
“காஷ்மீர் மக்களை பழிவாங்குவது ஏன்? - அமித்ஷா சொல்வது ‘இரட்டை’ நாக்கு வாக்குமூலம்” : முரசொலி விமர்சனம்!
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!