DMK Government
“தி.மு.க. கூட்டணியே மிகப்பெரிய வெற்றி பெறும்; மே 2ல் நாங்கள் சொன்னது தெரிய வரும்” - ப.சிதம்பரம் பேட்டி!
மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி., நேற்று காலை, தமது வாக்கினை, அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் - காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கண்டனூரில் - சிட்டாள் ஆச்சி நினைவு உயர் நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பதிவு செய்தார்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், "இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்!" என உறுதிபடக் குறிப்பிட்டார்.
ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
“நான் யாருக்கு வாக்களித்திருப்பேன் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எங்களுடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டும் என்பதிலே எந்த விதமான அய்யமும் இல்லை.
அந்த வழியிலே காரைக்குடி தொகுதி மிகப்பெரிய வெற்றியை எங்களுக்குத் தரும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலே ஆட்சி மாற்றம் தேவை என்பதற்கான ஆர்வம், வேகம் எல்லாம் நன்றாகவே புரிகிறது.
ஆக, அந்த ஆர்வமும், வேகமும், தேவையும் இந்தத் தேர்தலிலே பிரதிபலித்து, மே மாதம் 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் போது, நாங்கள் சொன்னது உண்மை, நாங்கள் சொன்னது மெய்ப்பிக்கப்படும் என்பதை நான் அழுத்தமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.”
இவ்வாறு கூறியுள்ளார்.
Also Read
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கீழடி நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
அறிவுசார் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு : திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டு!
-
“தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ஐயப்பாட்டை எழுப்புகிறது” : வைகோ அறிக்கை!
-
புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!