DMK Government
இந்தியாவில் மதச்சார்பின்மையை திமுகவும் தலைவர் மு.க.ஸ்டாலினும்தான் காக்க வேண்டும் - ஆ.ராசா பேச்சு!
நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டப்பேரவை தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் கா.ராமசந்திரனை ஆதரித்து தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா குன்னூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட குன்னூர் மற்றும் கோத்தகிரியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதன் பின் கோத்தகிரியில் மாலை 6 மணி அளவில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக பொதுக் கூட்டம் தி.மு.க மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க வேட்பாளர் கா.ராமசந்திரனை ஆதரித்து ஆ.இராசா பேசியதாவது:
தமிழகத்தில் ஓராண்டு காலமாக அனைத்து ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களுக்கு அ.தி.மு.க அரசால் வழங்கப்படும் பல கோடி ரூபாய் விளம்பரத்திற்கு நன்றி கடன் செய்வதற்காக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்கள் தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் கடும் போட்டி என பத்திரிகை துறையினர் அ.தி.மு.கவுக்கு விசுவாசம் காட்டி வருவது வேதனை அளிக்கிறது.
ஏன் என்றால் மு.க.ஸ்டாலின் என்ற மகத்தான தலைவரின் ஆளுமை எது . எடப்பாடி பழனிச்சாமியின் தரமற்ற ஆளுமை எது என்பதெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் இன்று தீர்மானிக்க உள்ளனர். மு.க.ஸ்டாலின் என்ற தலைவர் டெல்லி வரை நன்கு அறிந்த தலைவர் மட்டுமல்ல கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் எச்சூரி சொல்வது போல இந்தியாவில் மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டுமென்றால் தி.மு.கவும் அதன் தலைவர் ஸ்டாலினும் தான் இதை காப்பாற்ற வேண்டும் என்று அகில இந்திய தேசிய தலைவர்கள் எல்லாம் புகழ்ந்து பேசும் அளவிற்கு ஆளுமை, உச்சத்தை எட்டி உள்ள தலைவரை எடப்பாடி பழனிசாமியுடன் நிகர் படுத்தி பேசுவதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதா துணிச்சல்காரர். அவர் இருந்தவரை தமிழ்நாடு மாநிலத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்கவில்லை. ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு வரவில்லை. ஜிஎஸ்டி அமல்படுத்தப்படவில்லை. உதய் மின் திட்டம் கொண்டு வரப்படவில்லை. தமிழ்நாடு மாநிலத்தின் உரிமைகளை மத்திய அரசுக்கு விட்டுக் கொடுக்காமல் துணிச்சலாக செயல்பட்டவர் ஜெயலலிதா.
அதனால் தான் பிரதமராக இருந்த மோடி போயஸ் கார்டனுக்கு சென்று ஜெயலலிதாவை நேரில் பார்த்தார். ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்துகிறோம் என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமி மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்து மத்திய அரசின் காலடியில் கிடக்கும் அவல நிலை உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சொந்த புத்தி இல்லை. அவருக்கு ஸ்டாலின் புத்தி. ஸ்டாலின் சொல்வதை முதல்வர் நிறைவேற்றுகிறார்.
தற்போது, எடப்பாடி பழனிசாமி நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தி.மு.க பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லையா என கேள்வி எழுப்பி வருகிறார். தி.மு.க அன்றைய அரசியல் சூழல் காரணமாக பா.ஜ.கவோடு கூட்டணி வைக்க நேர்ந்தது. ஆனால், குறைந்தபட்ச செயல் திட்டம் என்ற நிபந்தனையோடு கூட்டணி வைத்தது.
பா.ஜ.க உருவாக்கப்பட்டதற்கான முக்கிய 3 நோக்கங்களான ராமர் கோயில் கட்டுவது கூடாது , காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது மற்றும் பொது சிவில் சட்டம் ஆகியவை தி.மு.க கூட்டணி இருந்தவரை நிறைவேற்றப்படவில்லை. தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து பிறகு ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு விட்டது.
தி.மு.க 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தி.மு.க தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றுவோம் என தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கிறோம். அ.தி.மு.க 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த விட்டு, தற்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் நெல்லை கண்ணன், ராஜேந்திரன், பேரூர் கழக செயலாளர் போஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே எம் ராஜு, செந்தில் ரங்கராஜன், இளங்கோவன் உள்ளிட்ட தி.மு.கவினர் கூட்டணி கட்சியினர் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!