Election 2024
மக்களவை தேர்தல் 2024 : 6000 வாக்கு வித்தியாசத்தில் மோடி பின்னடைவு... தொடர்ந்து ராகுல் முன்னிலை !
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துதுவதற்காக 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கி தேர்தளில் களம் கண்டுள்ளனர். இதுவரை இப்படி எதிர்க்கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. இதனால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைந்த தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 543 தொகுதிகளில் ஏற்கனவே குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீதமிருக்கும் 542 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் தமிழ்நாடு, பீஹார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில், பாஜக பின்னடைவில் இருந்து வருகிறது. இந்த சூழலில் மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் தற்போது மோடி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட மோடி, சுமார் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். மேலும் உபி காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் வேட்பாளருமான அஜய் ராய் முன்னிலையில் உள்ளார்.
அதே போல் ராகுல் காந்தி போட்டியிட்ட கேரளாவின் வயநாடு மற்றும் உ.பியின் ரேபரேலி ஆகியவற்றை தொடர்ந்து ராகுலே முன்னிலையில் உள்ளார்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!