Election 2024
”நாடு முழுவதும் மாற்றத்திற்கான புயல் வீசுகிறது” : ராகுல் காந்தி
18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்று உத்தர பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் 49 தொகுதிகளில் 5 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதற்கிடையில் நாடு முழுவதும் மாற்றத்திற்கான புயல் வீசுகிறது என காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள x சமூகவலைதள பதிவில், "அரசியலமைப்பு சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பதற்காக பா.ஜ.கவை தோற்கடிக்க மக்கள் எழுந்து நின்று இருக்கிறார்கள் என்பதை முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் தெளிவாக்கிவிட்டது.
வெறுப்பு அரசியலை கண்டு சலிப்புற்ற இந்த நாடு இப்போது தனது சொந்த பிரச்சனைக்காக வாக்களிக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கடனில் இருந்து விடுதலை, உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக வாக்களிக்கிறார்கள்.
இந்தியாவுடன் இணைந்து மக்கள் இந்த தேர்தலில் போராடுகிறார்கள். நாடு முழுவதும் மாற்றத்திற்கான புயல் வீசுகிறது" என தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு கட்ட தேர்தல்களே உள்ளன. ஜூன் 4 ஆம் தேதி 7 கட்டங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!