Election 2024
ராகுல் காந்தி கேள்விக்கு 24 மணி நேரமாக மவுனம் காப்பது ஏன்? : மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி!
18 ஆவது மக்களவை தொகுதி 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த மக்களை தேர்தலில் 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்தும் ஒரே கோரிக்கையுடன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கித் தேர்தலில் களம் கண்டுள்ளனர்.
இந்த இந்தியா கூட்டணி உருவானதிலிருந்தே பா.ஜ.கவின் தோல்வி தொடங்கிவிட்டது. தற்போது நடந்து முடிந்துள்ள மூன்று கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகளும் பா.ஜ.கவின் தோல்வியை உறுதிப்படுத்தி வருவதாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
தோல்வி பயம் காரணமாகத்தான் 10 ஆண்டு சாதனைகளை எதுவும் பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரங்களில் பேசாமல், மக்கள் மத்தியில் மத வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். தற்போது 10 ஆண்டுகளாக அதானி, அம்பானி குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசாத மோடி இன்று முதல் முறையாக வாய் திறந்து இருக்கிறார்.
"தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு ஏன் காங்கிரஸ் கட்சி அம்பானி, அதானியை பற்றிப் பேச மறுக்கிறது? என்ன காரணம்? அவர்களிடம் இருந்து இந்த தேர்தலுக்கு எவ்வளவு கறுப்புப் பணத்தைக் காங்கிரஸ் கட்சி பெற்றிருக்கிறது” என பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். அதில், டெம்போவில் நிரம்பும் அளவிற்குப் பணத்தை வைத்திருக்கும் அதானி, அம்பானியிடம் சிபிஐ அல்லது அமலாக்கத்துறை விசாரிக்குமா என பிரதமர் மோடிக்குக் கேள்வி எழுப்பி ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், ராகுல் காந்தி கேள்வி எழுப்பி 24 மணி நேரமாக மோடியும், நிர்மலா சீதாராமனும் அமைதி காப்பது ஏன் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், இரு முக்கியமான தொழிலதிபர்கள், டெம்போவில் நிரப்புமளவுக்குப் பணத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அப்பணம் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்கப்படுவதாகவும் சொல்லி இருக்கிறார் மோடி. அந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐ அல்லது அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது முற்றிலும் நியாயமான கோரிக்கை. ஆனால் மோடி எந்த பதிலும் இன்றி 24 மணி நேரம் அமைதி காக்கிறார்? நிதி அமைச்சரும் ஏன் எதுவும் பதில் சொல்லவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!