DMK
“வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வு மையத்தை தமிழகத்திலேயே ஒதுக்கிடுக” - டி.ஆர்.பாலு கடிதம்
தேசிய தேர்வு நிறுவனம், வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வு மையங்களை தமிழகத்திலேயே அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் மத்திய அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்றக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மருத்துவர் ஹர்ஷ்வர்தனுக்கு மின்னஞ்சல் மூலம் இன்று (ஆக.,13) கடிதம் அனுப்பியிருந்தார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தேர்வுகள் நிறுவனம், வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வுகள் 2020ஐ வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு, தேர்வு மையங்கள், கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இன்று வரையில் தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டுகள் போன்ற விவரங்களும் கிடைக்கப்பெறவில்லை.
கேரளா மாநிலம் தென்மேற்கு பருவக்காற்றின் பெருமழையால் அனைத்து மாவட்டங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் கர்நாடகா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாக உள்ள நிலையிலும் தமிழகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு மருத்துவ மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வது மிகவும் கடினமாக உள்ளது.
மேலும், தமிழகத்திலேயே ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு இணைய வழி அனுமதி சீட்டு பெறுவதில் மிகப்பெரும் சிரமங்களை அனைவரும் எதிர்கொண்டு வரும் நிலையில் மருத்துவ மாணவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.
எனவே வெளிமாநிலத்தின் தேஎர்வு மையங்களை தவிர்த்துவிட்டு தமிழக மாணவர்கள் தமிழகத்திலேயே தேர்வு எழுதும் வகையிலும் நுழைவுச் சீட்டுகள் ஆகஸ்ட் 20 தேதிக்கு முன்னதாகவே கிடைக்கவும் தேசிய தேர்வு நிறுவனத்துக்கு ஆணையிட்டு ஆவன செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசம் : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் த.வெ.க-வினர்!
-
”இயற்கையின் ரகசியம்.. நீலகிரியில் அரிய வகை பறக்காத ஈ கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த மக்கள்!”
-
அடுத்தடுத்து வெளிவரும் த.வெ.க நிர்வாகிகளின் மோசடி : ரூ.15 கோடி ஏமாற்றம்!
-
”தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம்.. ஆளுநரின் அஜெண்டாவிற்கு தலையாட்டிய விஜய்” : முரசொலி விமர்சனம்!
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!