DMK

தொடரும் கொரோனா பாதிப்பு.. நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு கைகொடுக்கும் தி.மு.க - காணாமல் போன அ.தி.மு.க

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக அன்றாடம் தொழில் செய்து பொருள் ஈட்டும் ஏழை எளிய மக்கள் சொல்லொனாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். வேலையில்லாமல், உணவு உண்ணாமல் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல், சமூகநலக் கூடங்களிலும், பள்ளிகளிலும் பல்வேறு பகுதிகளில் அடைந்து கிடக்கிறார்கள். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மக்களின் நலன் கருதி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தலைவர் மு.க.ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா’ எனும் திட்டத்தைத் தொடங்கினார். அதன் மூலம் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நேரடியாகச் சென்று நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், ‘ஏழைகளுக்கு உணவளிப்போம்’ என்ற திட்டம் மூலம் நாளொன்றுக்கு லட்சம் பேருக்கு உணவளிப்போம். பட்டினியில்லா சூழலை உருவாக்குவோம். இதற்காக 25 முக்கிய நகரங்களில் சமையல் கூடங்களை அமைத்து உணவுகளை வழங்கப்போகிறோம் என்றும் பேரிடர் காலத்தில் உணவின்றித் தவிப்போருக்கு கொண்டு சேர்ப்போம் என்றும் தி.மு.க தலைவர் கட்சி தொண்டர்களுக்கு அண்மையில் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் தி.மு.க தலைவரின் உத்தரவின் பேரில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும் முழுவீச்சில் நிவாரணப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழகம் முழுவதும் நிவாரண பணி நடந்துவரும் நிலையில் தி.மு.க மூலம் பலன் பெற்ற பலரும் தி.மு.க தலைவருக்கு தங்களது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், தமிழகத்தில் இவ்வளவு பாதிப்பு அதிகரிக்கும் போது அ.தி.மு.க வை சார்ந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏ க்கள் தங்களது தொகுதி பக்கம் மக்களுக்கு தேவையான உதவிகளையோ மருத்துவ உபகரணங்களையோ வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், சில இடங்களில் விளம்பரத்திற்காக விவாரனம் வழங்கும் அ.தி.மு.கனர் முறையாக சமூக விலகலைக் கடைபிடிக்கவில்லை என ஊடங்களே சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டுள்ளனர். எந்த உதவியும் செய்யாத அ.தி.மு.க எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், தங்கள் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ,.க்கள் எங்கே என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Also Read: “அ.தி.மு.க உறுப்பினர் அட்டையை கிழித்தெறிந்தேன்”- மு.க.ஸ்டாலினுக்கு ‘ஒன்றிணைவோம் வா’ பயனாளி எழுதிய கடிதம்!