DMK
“ஹிட்லர் செய்ததுபோல, நம்மையும் வதைமுகாமில் அடைப்பார்கள்” - எச்சரிக்கும் துரைமுருகன்!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்றது. இன்று சட்டப்பேரவையில் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், தேசிய மக்கட்தொகை கணக்கெடுப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசுகையில், “என்.பி.ஆர் படிவத்தில் அப்பா, அம்மா, பாட்டி பெயர் கேட்கப்படுகிறது. அப்படி தெரியவில்லை என்றால் என்ன பண்டிகை கொண்டாடினீர்கள் என கேட்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் என்றால் விட்டுவிடுவார்கள். ஆனால் ரம்ஜான், பக்ரீத் என்றால் விடமாட்டார்கள்.
அசாம் மாநிலத்தில் 19 லட்சம் பேரை ஹிட்லர் போல அகதிகளாக அடைத்து வைத்திருக்கிறார்கள். இப்படி நம்மையும் கொண்டு போய் நாளை அங்கு அடைத்து விடுவார்கள். அன்றைக்கு நீங்கள் இருப்பீர்கள். அவர்களின் நிலை என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், “இந்தியாவில் பல்வேறு உயர் பதவிகளை வகித்த குடும்பத்தினருக்கே இந்த சட்டத்தினால் பிரச்சனை ஏற்படும்போது, சாதாரண மக்களின் நிலை என்னவாகும் என்பதுதான் கேள்வி.
அதுமட்டுமின்றி, அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று தெரியாமல் அந்த சமுதாய மக்கள் உயிரை கையில் பிடித்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில், போராடும் மக்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் வாக்கு வங்கிக்காக சிலர் தூண்டுதலின் பேரில் போராடுகிறார்கள் என அமைச்சர் தெரிவிப்பது நியாயமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
Also Read
-
“எல்லாவற்றையும் செய்துவிட்டு வீட்டுக்குப்போய் ட்வீட்டா” : முதல்வர் விஜய்க்கு இ.பரந்தாமன் கடும் கண்டனம்!
-
“சட்டப்பேரவை மரபை மீறுகிறார் சபாநாயகர்.. திமுக மீதான அரசியல் தாக்குதல்” : எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!!
-
“முதலமைச்சரின் ‘மிசா’ பேச்சு, உடல்மொழி அநாகரிகமானது” : விஜயிக்கு கே.பாலகிருஷ்ணம் கடும் கண்டனம்!
-
‘சர்க்காரியா கமிஷன்’ - சட்டசபையில் அன்றே பதில் அளித்த கலைஞர்! (முழு தகவல்)
-
மிசா வரலாறு தெரியாமல் சகட்டுமேனிக்கு பேசக் கூடாது : அமைச்சர் நிர்மல்குமாருக்கு, பெ.சண்முகம் கடும் தாக்கு!