DMK
"நியாயம் வேண்டும்” - கோவில்பட்டி யூனியன் சேர்மன் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்து கனிமொழி எம்.பி தர்ணா!
முறைகேடு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட 335 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று பல இடங்களில் மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக கூறி தி.மு.க எம்.பி கனிமொழி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தி.மு.கவுக்கு 10 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 9 உறுப்பினர்கள் உள்ள அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில்பட்டி ஒன்றிய தலைவர் பதவிக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில், அ.தி.மு.க வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி முறைகேடாக அறிவித்தார்.
மொத்தமுள்ள 19 உறுப்பினர்களில் 10 பேர் தி.மு.கவுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், அ.தி.மு.க எப்படி வெற்றி பெற முடியும் என தி.மு.க-வினர் கேள்வி எழுப்பினர்.
இதுபற்றி தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, சரிவர விளக்கமளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, தி.மு.க உறுப்பினர்கள் கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கனிமொழி எம்.பி தலைமையில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். ஒன்றியத் தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தலை மீண்டும் நியாயமாக நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவில்பட்டி ஒன்றியப் பெருந்தலைவர் தேர்தலில் முறைகேடாக அ.தி.மு.க வென்றதாக அறிவிவிக்கப்பட்டிருப்பதாக கூறிய கனிமொழி எம்.பி., இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் எனத் தெரிவித்தார்.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!