DMK
“வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடைபெற்றால் வெற்றி தி.மு.கவுக்கே” - ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “சமீபத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இரண்டாம் தேதி எண்ணப்படுகின்றன. 2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பெற்ற வாக்குகள் செல்லாது என அறிவித்ததை அனைவரும் அறிவோம். இந்த உள்ளாட்சித் தேர்தலை நீதிமன்றம் வாயிலாக நடக்க வைத்துள்ளோம்.
எனவே, ஆளுங்கட்சியினர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு செயல்படவில்லை என்றால் அதன் விளைவை சந்திப்பார்கள். வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணப்படும் காட்சிகளை சிசிடிவி கேமராவில் பதிவு செய்யவேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளதை தேர்தல் ஆணையரிடம் கூறியுள்ளோம்.
நீதிமன்றத்தின் உத்தரவின்படி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டால் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெறும். அதுமட்டுமின்றி, வாக்கு எண்ணிக்கையின் போது எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது. அதற்காக மாவட்ட ஆட்சியர்கள் மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி நீதிமன்ற உத்தரவு குறித்து எடுத்துரைக்க வேண்டும்.
நீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அதே போல் செயல்படும் என நம்புகிறோம்” என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!