DMK
“நாட்டிலேயே இளைஞரணியை தோற்றுவித்த இயக்கம் தி.மு.கதான்”- உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் மாநில அளவில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை ஒப்புவித்தல் உள்ளிட்ட சிறப்பு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இதில், மாவட்ட அளவில் 1,287 பேர் பரிசு பெற்றனர். இறுதிப் போட்டிக்கு 234 பேர் தேர்வாகினர்.
இதையடுத்து கடந்த 2 நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில், மாணாக்கர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதனையடுத்து இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற 39 பேருக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று பரிசுகளை வழங்கினார். ஒவ்வொரு போட்டியிலும் மாநில அளவிலான பரிசாக 25 ஆயிரம் ரூபாரும், 2வது பரிசாக 15 ஆயிரம், 3வது பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், ஆறுதல் பரிசாக 10 பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுகளுடன் சான்றிதழ்களும் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
அதன் பிறகு மாணவர்கள் முன்னிலையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்தியாவிலேயே ஒரு இயக்கத்துக்காக முதன் முதலில் இளைஞரணி தொடங்கப்பட்டது திமுகவுக்கு தான் என்றும், அது இன்றும் உயிர்ப்புடன் இயங்கி வருகிறது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 12 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த போட்டிகளில் இதுவரை 17 ஆயிரத்து 667 மாணவ மாணவிகளுக்கு 3 கோடியே 95 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தாயகம் கவி, ஹசின் முகமது அலிஜின்னா, கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!