DMK
வர்ணாசிரமத்தை தூக்கிப்பிடிக்கும் தேசிய கல்விக்கொள்கை வரைவை திரும்பப் பெறுக : தி.மு.க ஆய்வறிக்கை வெளியீடு!
தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடிப்படையில் தி.மு.க-வின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தேசிய கல்விக் கொள்கையானது ஏழை மக்களுக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், வரைவு தேசியக் கல்விக் கொள்கை - இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உத்தரவாதத்திற்கு எதிரானது என்றும், வரைவு கல்வி கொள்கையானது ஒருதலை பட்சமாகவும், இந்தி மேலாதிக்கத்திற்கும் ஆதரவாக உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தி.மு.கவின் விரிவான ஆய்வறிக்கையின் முடிவில் தேசியக் கல்விக் கொள்கை வரைவை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டுள்ளது. வர்ணாசிரம தர்மத்தையும் - சாதி கட்டமைப்பையும் பாதுகாக்கவே மறைமுகமாக இந்தக் கல்விக் கொள்கை விரும்புவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான - மாணவர்களுக்கு எதிரான - மக்களுக்கு எதிரான, தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை தி.மு.கழகம் கடுமையாக எதிர்ப்பதாகவும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அதிமுக MLA-களை Whole Sale-ல் வாங்கும் தவெக.. திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!
-
பல்லிளிக்கும் தவெக அரசு.. அமைச்சர் நிர்மல்குமார் நிகழ்வில் மின் தடை.. அமைச்சர், மின்துறை இரட்டை விளக்கம்!
-
“நீங்கள் Failed ஹீரோ, Failed முதலமைச்சர்” : விஜய் பேச்சுக்கு தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் பதிலடி!
-
ஆய்வு, ஆராய்ச்சி என்ற பெயரால் படுகுழிக்கு பல்லாக்கு தூக்குவதா? : முரசொலி தலையங்கம் சாடல்!
-
“பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்... தரம் தாழ்ந்து பேசுவதா?”: சிஎம் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!