Cinema

”தென்னிந்திய படங்களே தனது நட்சத்திர அந்தஸ்துக்கு காரணம்” : ’இந்தி’ ஊடகம் கேள்விக்கு ஜெனிலியா நச் பதில்!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஜெனிலியா டி சவுசா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடத்தி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்த பிறகு தமிழ் படங்களில் நடிப்பது இல்லை. இந்தியில் மட்டும் சில படங்களில் நடித்து வருகிறார். இருந்தும் இவரை தமிழ் ரசிகர்கள் மறக்கவில்லை.

இந்நிலையில் தென்னிந்திய படங்களே தனது நட்சத்திர அந்தஸ்துக்கு காரணம் என நடிகை ஜெனிலியா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். முப்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜெனிலியாவிடம் இந்தி செய்தியாளர்கள்,தென்னிந்திய படங்க ளில் உங்களுக்கு வலுவான கதாப்பாத்திரங்கள் தரப்பட்டதில்லை தானே?” கேள்வி எழுப்பினர்.

இதற்கு ஜெனிலியா, ”நிச்சயம் இல்லை. என்னுடைய தென்னிந்திய படங்களில் எனக்கு எப்போதும் சிறந்த கதாப்பாத்திரங்களே கொடுக்கப் பட்டுள்ளன. அங்கு எனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்காக நான் என்றும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். ஹைதராபாத்தில் ஹாசினி என்றும், தமிழில் ஹரிணி என்றும், மலையாளத்தில் ஆயிஷா என்றும் எனது கதாப்பாத்திரங்கள் வழி யேதான் தென்னிந்திய மக்கள் என்னை நினைவில் வைத்திருப்பார்கள்.

தென்னிந்திய படங்கள் தான் சிறந்தது. தென்னிந்திய படங்களில் நடித்ததன் மூலம் தான் பெற்ற நட்சத்திர அந்தஸ்துக்கும், கற்றல் அனுபவத்திற்கும் என்றென்றும் நான் கடன்பட்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “இதனால்தான் பஹல்காம் போன்ற தாக்குதல் நடக்கிறது..” - பாடகர் சோனு நிகம் கருத்தால் கொந்தளிக்கும் கன்னடர்கள்!