Cinema

பேயாட்டம் ஆடிய BB வீடு : Gang-னால வீட்டோட விளையாட்டே கெட்டுப்போச்சு : வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் தொடங்கி 61 நாட்களை கடந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியின் 9வது வாரத்திற்கான கேப்டனாக ஜெஃப்ரி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். கருத்துக்கணிப்பில் போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சாச்சனா வீட்டின் vice captain-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, பிக்பாஸ் வீட்டின் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது. இதில், மஞ்சரி, ஆனந்தி, ராணவ், முத்து, ரஞ்சித், சாச்சனா, ரயான், தர்ஷிகா, சத்யா, சௌந்தர்யா, பவித்ரா மற்றும் ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டனர்.

மேலும், ஷாப்பிங் டாஸ்க்கில் போட்டியாளர்களுக்கு தனி தனியாக பாடல் ஒலிக்கப்படும் அது எந்த பாடல் என உடல் மொழியை வைத்து மற்ற போட்டியாளர்கள் கண்டறிய வேண்டும் என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. கண்டறியப்படும் ஒவ்வொரு பாடலுக்கும் 500 points வழங்கப்படும். இதில் பிக்பாஸ் வீட்டார் 6,500 points பெற்று இந்த வாரத்திற்கு ஷாப்பிங் செய்தனர்.

இதையடுத்து, இந்த வாரத்திற்கான Angels vs Devils என்ற weekly டாஸ்க் தொடங்கியது. இதில் அன்பை மட்டும் வெளிப்படுத்துவது அல்லது வெளிப்படுத்த நினைப்பது, சுயரூபத்தை காட்டக்கூடாது என நினைப்பவர், தன்னை அன்பின் உருவமாக காட்டிக்கொள்பவர் என்ற அடிப்படையில் ரஞ்சித், அன்ஷிதா, சத்யா, ஆனந்தி, விஷால், பவித்ரா, ரயான் மற்றும் ஜெஃப்ரி ஆகிய 8 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 8 பேரும் angels ஆக பிக்பாஸால் அறிவிக்கப்பட்டனர்.

மீதம் இருந்த மஞ்சரி, ஜாக்குலின், முத்து, தீபக், சவுந்தர்யா, சாச்சனா, அருண், தர்ஷிகா, ராணவ் ஆகிய 9 போட்டியாளர்கள் devils. devils யாருக்கும் பயம், பரிதாபம், அக்கறை, இரக்க குணம் என்ற எதுவும் இருக்கக்கூடாது, எந்த வேலையும் செய்யக்கூடாது, கேலி, கிண்டல், பொறாமை, வன்மம், பழிதீர்த்தல் போன்ற குணாதிசயங்களுடன் செயல்பட்டு angels-டம் இருக்கும் 3 heart-களை பறிக்க வேண்டும். இதில் ஒருவருக்கு nomination free pass வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மேலும் angels-ல் மூன்று நபர்களை target செய்து அவர்களின் heart -ஐ முதலில் பறிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இதற்காக devils-ஆல் அன்ஷிதா, பவித்ரா மற்றும் சத்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதே போல devils எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் புன்சிரிப்புடன் சகித்துக்கொள்ள வேண்டும் என angels-க்கு கூறப்பட்டது. இதில் அன்ஷிதாவின் தலையில் நீரை ஊற்றுவது, மிளகாய் உண்ண வைப்பது, ஜெஃப்ரியை 137 முறை தோப்புக்கரணம் போட வைப்பது, பவித்ரா வாயில் முட்டை ஊற்றுவது, கீழே கிடக்கும் முட்டையை எடுத்து ஆனந்தி வாயில் தடவுவது, சத்யாவின் ஆடையை கிழித்து வெறுப்பேற்ற முயன்றது போன்ற அனைத்துமே வரம்பை மீறிய செயல்களாகவே இருந்தது.

இது போன்ற செயல்கள் மூலம் தங்களது ஓவ்வொரு heart களையும் angels பறிகொடுக்கும்போதும், ‘தீமைதான் வெல்லும்’ என்ற பாடலும் ஒழிக்கப்பட்டது. இந்த டாஸ்கில் devils கொடுமை தாங்காமல் அதிகமாக உடைந்து, கத்தியது அன்ஷிதாதான். ஒரு கட்டத்தில், "என்னால தாங்க முடியல... வெளிய விடுங்க" என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்யதுவிட்டார். இதில் நல்ல devils ஆக வலம் வந்தனர் சௌந்தர்யா மற்றும் ஜாக்குலின். இதன் மூலம் devilஆ இருக்க தகுதி இல்லை என்ற அடிப்படையில் மற்ற devils-களால் தேர்வுசெய்யப்பட்ட ஜாக்குலின் jail-க்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இதையடுத்து, weekly டாஸ்க் அடுத்த கட்டத்திற்கு சென்றது. இதில் devil-ஆக இருந்தவர்கள் angels ஆகவும், angels-ஆக இருந்தவர்கள் devil ஆகவும் செயல்பட வேண்டும். இதிலும் சாச்சனா, மஞ்சரி, தர்ஷிகா ஆகிய மூன்று நபர்கள் devils-ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டு target செய்யப்பட்டனர். ஆனால் வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடாமல், கேலி கிண்டல் போன்ற செயல்களால் கோவப்பட வைத்து hearts பறிக்கப்பட்டது. பெரிதும் சுவாரசியம் இல்லாமல் நகன்ற இந்த level-ல் ஜெஃப்ரிகாக ஜாக்குலினிடம் ரஞ்சித் heart கேட்டதை சர்ச்சையாக்கினார் ஜாக்குலின். ஒருவழியாக டாஸ்க் முடிந்தது. இதையடுத்து, இந்த டாஸ்கை விதிகளின் படி விளையாடிய நபரை தேர்ந்தெடுத்து nomination free pass-ஐ வழங்கும் படி பிக்பாஸ் கூறினார். இதில் சக போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் மஞ்சரி.

இதனை தொடர்ந்து, சிறந்த angelகள் மற்றும் devil-களை தேர்வு செய்யும்படி பிக்பாஸ் அறிவித்தார். இதில், சிறந்த devilகளாக மஞ்சரி மற்றும் தீபக்கும்; சிறந்த angelகளாக ரஞ்சித் மற்றும் பவித்ரா தேர்வுசெய்யப்பட்டனர். இவர்கள் நால்வரும்தான் அடுத்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்கில் பங்கேற்பார்கள் என்றும் பிக்பாஸ் அறிவித்தார். அதேபோல இந்த வாரம் முழுவதும் சிறப்பாக பங்கேற்காத நபர்களாக ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யா தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு அறிவிப்பு வரும் வரை பிக்பாஸால் வழங்கப்படும் உணவை சாப்பிட வேண்டும் என்றும், டி, காபி, ஸ்னாக்ஸ் போன்ற எதற்கும் அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டது. இவர்கள் இருவருக்கும் உணவாக வந்தது என்னவோ உப்பு இல்லாத சாம்பார் சாதம்.

"தண்ணில கண்டம்" என்ற அடுத்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் தொடங்கியது. இதில், மஞ்சரி, தீபக், ரஞ்சித் மற்றும் பவித்ரா ஆகிய நால்வருக்கும் தனித்தனியான நீருடன் கேன் வழங்கப்பட்டு அதில் ஓட்டையை அடைத்து வைக்கும் விதமாக சிறு கட்டைகள் பொறுத்தப்பட்டிருந்தது. இதில் கைகளை எடுத்துவிட்டால் தண்ணீர் வெளியேறும் அவரை பாதுகாப்பதுடன் சக போட்டியாளரையும் தகர்க்க வேண்டும் என்பது விதி. இதில் திறமையாக விளையாடிய ரஞ்சித் டாஸ்கில் வெற்றி பெற்று அடுத்த வாரத்திற்கான கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

நிகழ்ச்சி வார இறுதி நாட்களுக்கு வந்துவிட்ட நிலையில் இன்று போட்டியாளர்களை சந்திக்க வந்த தொகுப்பாளர்கள் விஜய் சேதுபதி, "இந்த வாரம் வீட்டுக்குள்ள பேய் புடிச்சிருக்கு, புடிச்ச பேய் எல்லாரையும் புடிச்சதானு கேட்டா இல்ல, தனக்கு புடிச்சவங்கள புடிக்கல, புடிக்காதவங்கள தேடி தேடி புடிச்சது, பாஞ்சி கழுத்தலாம் கடிச்சது, அப்புறம் இரக்கமே இல்லாம விளையாடுங்கனு சொன்னா நல்லா இறங்கி விளையாண்டாங்க, ஆனா சில பேரு friends-ஓட gang-ஆ form பண்ணிக்கிட்டு அவுங்களுக்காக விட்டுக்கொடுத்து அவங்க விளையாண்ட விளையாட்டு வீட்டோட விளையாட்டையும் கெடுத்துருச்சோனு தோணுது என கூறி தனது விசாரணையை தொடங்கியுள்ளார். நிகழ்ச்சி 60 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

- சீ. ரம்யா

Also Read: ராணவ்வை target செய்யும் போட்டியாளர்கள் : பொம்மை டாஸ்கில் வெல்லப்போவது யார்?