Cinema
பல வருடங்களுக்கு பின்... இணையத்தில் வைரலாகும் 90’ஸ் கனவு கன்னியின் புகைப்படம் : ஷாக்கான ரசிகர்கள் !
90s கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர்தான் நடிகை கனகா. 1989-ம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான 'கரகாட்டக்காரன்' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அப்போதே "மாங்குயிலே பூங்குயிலே.." பாடல் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார். முதல் படத்திலேயே இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.
கனவு கன்னியாக மாறத்தொடங்கிய இவர், பெரிய இடத்து பிள்ளை, எங்க ஊரு ஆட்டுக்காரன், முதல் குரல், அதிசய பிறவி என பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த இவர், இறுதியாக சூர்யாவின் 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதன்பிறகு 2007-ம் ஆண்டு கலிஃபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக்குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. எனினும் இதுவரை அவரது திருமண வாழ்க்கை குறித்த தகவல்கள் பெரிதாக வெளிவரவில்லை. திரைத்துறைக்கு பல ஆண்டுகளாக இடைவெளி கொடுத்திருக்கும் இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீடியோ வெளியிட்டார்.
அந்த வீடியோவில் "நான் மீண்டும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஒரு வேளை, நான் மீண்டும் நடிக்க வந்தால் ஒப்பனை முதல் ஹேர்ஸ்டைல் வரை இன்றைக்கு இருப்பதற்கு தகுந்தாற்போல் பல விஷயங்களை புதிதாக கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கிறது. அவற்றை தான் கற்க தயார்; இதேபோல் நான் கற்றுக்கொண்டதை பிறருக்கு கற்றுக்கொடுக்கவும் தயார்" என்று கூறியிருந்தார்.
விளம்பரம் தேடும் நோக்கில் கனகா பதிவிட்டிருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், "நான் விளம்பரம் தேடவில்லை. சினிமாவை பற்றி இதுவரை எதுவும் கற்றுக்கொள்ளாமல் இருந்த நான் புதிதாக கற்கலாமா என்று யோசிப்பதாக தான் அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தேன்" என்று மற்றொரு வீடியோவும் வெளியிட்டிருந்தார். எனினும் இவரை பற்றி திரையுலகம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில், நடிகை கனகா நடிகை குட்டி பத்மினியுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை குட்டி பத்மினி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில், "பல வருடங்களுக்குப் பிறகு என் அன்புக்குரிய தேவிகாவின் மகளும், என் அன்புக்குரிய சகோதரியுமான கனகாவை மீண்டும் சந்தித்தது அளவுகடந்த மகிழ்ச்சி. நாங்கள் ஒருவருக்கொருவர் நல்ல நேரத்தை செலவழித்தோம் !" என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் உடல் பருமனான தோற்றத்தில் கனகா தோற்றமளிக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், 'கனகாவா இது..!' என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !
-
செப்.1 முதல் ‘நெல் கொள்முதல் விலை’ அதிகரிப்பு! : விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு உத்தரவு!