Cinema
வெகு நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்... உள்ளே சடலமாக கிடந்த பிரபல நடிகர்! - கேரளாவில் அதிர்ச்சி !
சச்சி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் தான் 'அய்யப்பனும் கோஷியும்'. பிரித்விராஜ், பிஜு மேனன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் பெரும் வெற்றிபெற்றது. பல்வேறு விருதுகளை பெற்ற இந்த படம், 2022-ம் ஆண்டுக்கான தேசிய விருது போட்டியில் 4 பிரிவுகளில் விருது வென்று சாதித்தது. இந்த சூழலில் இந்த படத்தில் நடித்த நடிகர் ஒருவர் காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் ஸ்டீபன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் வினோத் தாமஸ். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, ஜூன், ஹேப்பி வெட்டிங், ஒருமுறை வந்த் பாத்தாயா, ததோலி ஒரு செரிய மீனல்லா உள்ளிட்ட சில படங்களில் அடுத்தடுத்து நடித்தார். தொடார்ந்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த நிலையில் கோட்டயம் அருகே பம்படி என்ற பகுதியில் கார் ஒன்று வெகுநேரமாக நிறுத்தப்பட்டிருந்துள்ளது. இதனை கண்ட அந்த இடத்துக்கு சொந்தமான ஹோட்டல் நிர்வாகம் அங்கே சென்று பார்த்தது. அப்போது அந்த காரில் வினோத் தாமஸ் சடலமாக கிடந்துள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், காரின் கதவை உடைத்து, உள்ளே சடலமாக கிடந்தவரை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைதொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது இயற்கை மரணமா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்த விவரம் உடற்கூறாய்வு முடிவுக்கு பிறகே தெரியவரும்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில், பிரபல நடிகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் வினோத் தாமஸ் இறப்புக்கு தற்போது திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!