Cinema
வெறும் 26 வயதுதான்.. முன்னாள் உலக அழகி போட்டியாளர் திடீர் மரணம் : அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள் !
தென் அமெரிக்காவில் அமிர்ந்துள்ளது உருகுவே (Uruguay) என்ற நாடு. இங்கு வசித்து வந்தவர் ஷெரிகா டி அர்மாஸ் (Sherika De Armas). பிரபல மாடலாக அறியப்படும் இவர், பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். அதோடு 2015-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.
ஆனால் அந்த போட்டியில் சில சுற்றுகள் முடித்த இவரால், டாப் 30 இடங்களில் கூட வர முடியவில்லை. இருந்த போதிலும், அந்த போட்டியில் கலந்துகொண்ட 18 வயது போட்டியாளர்கள் 6 பேரில், இவரும் ஒருவராக இருந்தார். அந்த போட்டியில் இறுதி கட்டம் வரை கலந்துகொள்ள முடியாத இவர், அது குறித்து வருத்தம் தெரிவிக்கவில்லை.
மாறாக, தான் எப்போதும் விளம்பரம், ராம்ப் வாக் போன்ற மாடல் அழகியாகவே இருக்க விரும்புவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மீண்டும் பல விளம்பரங்களில் மாடலாக கலக்கி வந்தார். அதோடு தலைமுடி பராமரிப்பு தொடர்பான பொருட்களையும் விற்பனை செய்யும் 'ஷே டி அர்மாஸ்' (Shey De Armas) ஸ்டுடியோ எனப்படும் நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இந்த சூழலில் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதன்காரணமாக மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, ஷெரிகாவுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து இந்த புற்றுநோய்க்கு தேவையான கீமோதெரபி சிகிச்சையை தொடர்ந்து எடுத்து வந்துள்ளார். எனினும் அந்த சிகிச்சை பலனளிக்காமல் தொடர்ந்து இவரது உடல்நிலை மோசமாகி தீவிர சிகிச்சை எடுத்து வந்த நிலையில், தற்போது 26 வயதில் உயிரிழந்தார்.
வெறும் 26 வயதில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக முன்னாள் உலக அழகி போட்டியாளர் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“இந்தியாவிலேயே வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்!” : திராவிட மாடல் ஆட்சியை புகழ்ந்த தமிழ்நாடு அரசு!
-
“மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்!” : தமிழ்நாடு வளர்ச்சி குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் மனு!
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ - மருத்துவமனையில் இருந்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
-
தமிழ்நாட்டு மீனவர்களை மீட்பது எப்போது? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கேள்விகளை எழுப்பிய கணபதி ராஜ்குமார் MP!
-
பிரதமரின் மக்கள் மருந்தகத்தின் மருந்துகள் தரமானவையா? : மக்களவையில் மலையரசன் MP கேள்வி!