Cinema
“இனி லியோ தான் வந்து உண்மைய சொல்லணும்..” : 1 மணி நேரத்தில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ட்ரைலர்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம்தான் லியோ. திரிஷா, அர்ஜுன், மிஸ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், அனுராக் காஷ்யப், கெளதம் மேனன், சஞ்சய் தத், டான்சர் சாண்டி என திரைபட்டாளமே நடித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரிலும் இரண்டாம் கட்ட படபிடிப்பு சென்னையிலும் நடைபெற்று நிறைவடைந்தது.
சுமார் 125 நாட்களில் இதன் படப்பிடிப்பை லோகேஷ் முடித்ததாக ரசிகர்கள் பாராட்டினர். அனிருத் இசையமையக்கும் இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எகிறி இருக்கிறது. லோகேஷுடன் மாஸ்டர் படத்திற்கு பிறகு இணைந்த விஜய், இந்த முறை இந்த படத்தின் மூலம் LCU-வில் இணைகிறார்.
இந்த மாதம் 19-ம் தேதி இந்த படம் வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்த படத்தின் அப்டேடுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். அதனை பூர்த்தி செய்யும் விதமாக ஒவ்வொரு அப்டேடையும் படக்குழு வெளியிட்டு வந்தது. தொடர்ந்து இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இன்று இதன் ட்ரைலர் வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து இன்று காலை முதலே,இணையத்தில் லியோ ட்ரைலர் ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வந்தது. இந்த நிலையில், சொன்னபடியே இன்று மாலை 6.30 மணிக்கு இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. ட்ரைலர் வெளியாகி சுமார் 1 மணி நேரத்தில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த டபத்தின் ட்ரைலர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
Also Read
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!
-
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் : திமுக MP ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!
-
”அனல் மின் நிலையங்களுக்கு உரிய நிலக்கரி ஒதுக்கீடு வேண்டும்” : தமிழச்சி தங்கபாண்டியன் MP வலியுறுத்தல்!
-
“அரசமைப்பு திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல; சர்வாதிகாரத்தின் தொடக்கம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி” : நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி அ.மணி கோரிக்கை!