Cinema

கண்ணா 3 லட்டு திண்ண ஆசையா.. ஒரே நாளில் வெளியான ரஜினி, விஜய் படங்களின் Updates.. செம்ம குஷியில் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகர்களாக இருப்பவர்கள் ரஜினி, விஜய். இவர்களது படங்களின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருப்பர். அந்த வகையில் இன்று 2 நடிகர்களின் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்கள் குஷி படுத்தியுள்ளது.

ரஜினியின் 'ஜெயிலர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து அவரது 170-வது படத்தை டி.ஜே ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதன் அதிகாரபூர்வ தகவல் அண்மையில் வெளியான நிலையில், தற்போது மேலும் அப்டேட்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் மூலம் மீண்டும் ரஜினி படத்தில் அனிருத் இணைந்துள்ளார்.

தொடர்ந்து இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகைகள் துஷாரா, ரித்திகா சிங், மஞ்சு வாரியார் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து லோகேஷுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல், விஜயின் லியோ படம் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அவரது 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில், இன்று படத்தின் பூஜை தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன்படி இன்று T68 படத்தின் அப்டேட்களும் வெளியாகியுள்ளது.

அதன்படி நடிகர் பிரஷாந்த், பிரபு தேவா, பிரியங்கா மோகன், மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்து படக்குழு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் 68-வது படம் குறித்து வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்கள் அனைவரின் அன்பு மற்றும் வாழ்த்துகளுடன் T68 தொடங்கியது. ஒரு வேடிக்கையான ரோலர் கோஸ்டர் சவாரியாக இருக்கும். லியோ படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அனைத்து அப்டேட்களும் வெளியிடப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் ட்ரைலர் வரும் 5-ம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் வரும் வரும் 19-ம் தேதி உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Also Read: 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வீடு.. Sex Education-ல் வரும் Otis வீடு விற்பனை.. ரசிகர்கள் அதிர்ச்சி !