Cinema
“தமிழ் நடிகரால் துன்புறுத்தப்பட்டேன்..” - வைரலான ஊடகத்தின் செய்திக்கு நித்யா மேனன் பதிலடி !
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை நித்யா மேனன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், கன்னடம், இந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தற்போது வரை விடாமல் தொடர்ந்து திரையுலகில் வலம் வருகிறார்.
இவர் தமிழில் விஜயுடன் மெர்சல், துல்கருடன் ஓகே கண்மணி, ராகவா லாரன்சுடன் காஞ்சனா 2, சூர்யாவுடன் 24, தனுஷுடன் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை நித்யா மேனன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், கன்னடம், இந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தற்போது வரை விடாமல் தொடர்ந்து திரையுலகில் வலம் வருகிறார்.
இவர் தமிழில் விஜயுடன் மெர்சல், துல்கருடன் ஓகே கண்மணி, ராகவா லாரன்சுடன் காஞ்சனா 2, சூர்யாவுடன் 24, தனுஷுடன் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் 'குமாரி ஸ்ரீமதி' (Kumari Srimathi) என்ற தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகவுள்ளது.
இந்த சூழலில் இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் இவர் கலந்துகொண்டார். மேலும் தனியார் தொலைக்காட்சி, youtube சேனல் உள்ளிட்டவைகளுக்கு இவர் பேட்டியும் அளித்து வந்தார். அப்போது இவர், "என்னை தெலுங்கு திரையுலகில் யாரும் துன்புறுத்தியது இல்லை. ஆனால் தமிழில் ஒரு நடிகர் என்னை ஷூட்டிங்கின்போது துன்புறுத்தியுள்ளார்" என்று பேசியதாக செய்திகள் வெளியானது.
இது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து இது தமிழ் திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டதோடு, விமர்சிக்கவும் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது நித்யா மேனன், தான் இப்படி ஒன்றை பேசவே இல்லை என்று மறுப்பு தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "'இது முற்றிலும் தவறான செய்தி. அப்படி நான் எந்த ஒரு நேர்காணலும் கொடுக்கவில்லை. இந்த போலிச் செய்தியைப் பரப்பியது யார் என்று அடையாளம் காட்டுங்கள். மிகக் குறுகிய காலத்திற்குத்தான் நாம் அனைவரும் இங்கு இருக்கிறோம். நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு தவறு செய்கிறோம் என்பது எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது.
பொறுப்புக்கூறல் மட்டுமே மோசமான நடத்தையை நிறுத்தும் என்பதால் இன்று இதை நான் சுட்டிக்காட்டுகிறேன். சிறந்த மனிதர்களாக இருங்கள்" என்று குறிப்பிட்டு தனியார் ஊடகத்தை டேக் செய்துள்ளார். இது தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!