Cinema
மித்ரன் is Back.. “நா தான் அதுலயும் ஹீரோ..” : கூட்டாக சேர்ந்து புது பட Update வெளியிட்ட அண்ணன் - தம்பி!
பிரபல இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015-ல் வெளியான படம்தான் ‘தனி ஒருவன்’. ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல் தீம் மியூசிக் என அனைத்தும் ஹிட் கொடுத்த நிலையில், படம் மாபெரும் ஹிட் கொடுத்தது.
ஸ்க்ரீன் பிளே மாஸாக இருந்த நிலையில், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் அரவிந்த் சாமிக்கு பெரிய கம் பேக் கொடுத்தது. அதுவரை சாக்லேட் பாயாக இருந்து வந்த அரவிந்த் சாமி, இதில் வில்லன் காதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார். சுமார் 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், சுமார் ரூ.105 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.
மேலும் இந்த படம் ஜெயம் ரவிக்கும் பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படம் தெலுங்கில் ரீ மேக் ஆனது. ராம் சரண், அரவிந்த் சாமி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடிப்பில் 2016-ல் வெளியான இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கி இருந்தார். இந்த படமும் தெலுங்கில் பெரிய ஹிட் கொடுத்தது.
இந்த சூழலில் இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பாப்பு எகிறிய நிலையில், தற்போது இந்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இயக்குநர் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனி ஒருவன் 2 விரைவில் வரவுள்ளதாகவும், அதில் ஜெயம் ரவியே ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் 2 பேரும் சேர்ந்து தெரிவித்துள்ளனர்.
மேலும் தனி ஒருவன் வெளியாகி வரும் ஆகஸ்ட் 28-ம் தேதியன்று 8-வது ஆண்டு ஆகும் நிலையில், அன்றே இந்த படம் குறித்த விவரம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது ரசிகர்கள் பெரும் குஷியிலும் ஆர்வத்திலும் உள்ளனர்.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!