Cinema
“வந்த இடம் என் காடு..” : ஜெயிலில் குத்தாட்டம்.. வெளியானது அனிருத் குரலில் SRK படத்தின் முதல் பாடல் !
தமிழில் முன்னணி இயக்குநராக இருப்பவர் அட்லீ. இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஷாருக்கான் முன்னணி ரோலில் நடிக்க, நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி என தென்னிந்திய நடிகர்களும் நடித்துள்ளனர். தீபிகா படுகோனே இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜயும் இதில் ஒரு காட்சிகளில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் செப்டெம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிவுள்ளது. இதன் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதி முதல் முறையாக ஷாருக்கானுடன் பாலிவுட்டில் இணைகிறார். இந்த படத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனிடையே இந்த படம் தொடர்பான புரோமோஷன் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் இந்த படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், இதன் முதல் பாடலான "வந்த இடம் என் காடு.." பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் உருவான இந்த பாடலை, அனிருத்தே பாடியுள்ளார். இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இந்த பாடல் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
முன்னதாக 'ஜவான்' படம் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், ரஜினியின் 'ஜெயிலர்' படம் ஆகஸ்ட் 10-ல் வெளியாகும் என அறிவிப்பு வெளியானதால், ஜவான் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றியமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!