Cinema
Shooting முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த இளம் நடிகை.. எதிரே வந்த லாரி மோதியதில் உடல் நசுங்கி பலி !
அண்மைக்காலமாக திரை பிரபலங்கள் இறப்பு செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமாக இருக்கிறது. சில இயற்கை மரணங்களாக இருந்தாலும், சில உடல்நல பிரச்னை காரணமாக நிகழ்கிறது. மேலும் சில விபத்துகள் மூலம் ஏற்படுகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் தற்போதும் நடந்துள்ளது. கோர விபத்தில் சிக்கிய பிரபல பெங்காலி நடிகை பரிதாபமாக உயிரிழந்தார்.
பெங்கால் மொழி சீரியல்களில் நடித்து வருபவர் தான் சுசந்திரா தாஸ்குப்தா. 29 வயதாகும் இவர் பிரபல மாடல் ஆவார். இந்த சூழலில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்து பிரபல பெங்காலி சீரியல்களில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து பெங்காலி மொழி படங்களிலும் நடித்தார்.
இந்த சூழலில் தற்போது தொடர்ந்து நடித்து வரும் இவர், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் ஷூட்டிங் முடித்து விட்டு வீட்டுக்கு செல்ல நினைத்துள்ளார். அதன்படி இரு சக்கர வாகனம் ஒன்றை புக் செய்து அதில் பயணம் செய்தார். அவரது தலையில் ஹெல்மெட் மாட்டிருந்தார். அப்போது சுசந்திரா சென்ற இரு சக்கர வாகனம் கொல்கத்தாவின் பராநகர் கோஷ்பாரா பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அவர்களுக்கு பின்னே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் அவர்களது வாகனம் மீது மோதியது. இதில் நிலைத்தடுமாறிய சுசந்திரா தவறி கீழே விழ, அந்த சமயத்தில் எதிரே வந்த லாரி அவர் மீது ஏறியுள்ளது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் நடிகை சுசந்திரா பரிதாபமாக பலியானார். இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில் விரைந்து வந்த அவர்கள் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!