Cinema
“இவரால்தான் ரஜினி படத்தில் என் காட்சிகளை நீக்கிவிட்டனர்..” - நயன்தாராவை குறிப்பிட்டு மலையாள நடிகை புகார்!
கடந்த 2005-ம் ஆண்டு வெளியான 'மயோக்கம்' என்ற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் மம்தா மோகன்தாஸ். இதன் பிறகு மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வந்தார்.
தமிழில் விஷால் நடிப்பில் வெளியான 'சிவப்பதிகாரம்' என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் மாதவனுடன் 'குரு என் ஆளு', அருண் விஜயுடன் 'தடையற தாக்க', ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் முழுக்க முழுக்க மலையாளத்தில் மட்டுமே நடித்து வந்த இவர், 2021-ம் ஆண்டு விஷால், ஆர்யா நடிப்பில் வெளியான 'எனிமி' படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்தார். ஆனால் இம்முறை ஆர்யாவுக்கு ஜோடியாகவும், விஷாலுக்கு எதிரியாகவும் நடித்திருந்தார்.
தற்போதும் கைவசம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காகச் சிகிச்சை எடுத்து வந்ததால் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். பின்னர் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்து மீண்டும் நடிக்க தொடங்கிய இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'விட்டிலிகோ' என்ற ஆட்டோ இம்யூனே நோயால் பாதித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தற்போது விளம்பர படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ள இவர், அண்மைக்காலமாக பேட்டிகளும் அளித்து வருகிறார். அவ்வாறு இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் நயன்தாராவா தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
இவர் அளித்த அந்த பேட்டியில் ''ரஜினி சாருடன் ஒரு பாடலில் நடிப்பதற்காக வாய்ப்பு வந்தது. நானும் ஒப்புக்கொண்டு சுமார் 4, 5 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் படம் வெளியான போது எனது காட்சிகள் இல்லை.
அதன்பிறகு தான் எனக்கு தெரிந்தது அந்த படத்தின் ஹீரோயின் படக்குழுவினரிடம் வேறு ஹீரோயின் இந்தப் பாடலில் நடித்தால், நான் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி அந்த படத்தில் ஒரே ஒரு சீன், அதுவும் நான் திரும்பி இருப்பது போன்ற ஒரு ஷாட் மட்டும் இருக்கும். அதுவும் கூட நீங்கள் சரியாக பார்க்க கூட முடியாது. அப்படி ஒரு ஷாட் தான் இருக்கும். இதனால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். எனது அந்த 3, 4 நாட்களும் வீணாகின." என்று படத்தின் பெயர், ஹீரோயின் பெயர் என எதுவும் குறிப்பிடாமல் கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் பேசிய இந்த வீடியோவை இணையவாசிகள் எடுத்து அது யார் என்று அலசி ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர். அதாவது அந்த படம் குசேலன் என்றும், அந்த ஹீரோயின் நயன்தாரா என்றும் வீடியோ ஆதாரத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
பி.வாசு இயக்கத்தில் ரஜினி, பசுபதி, மீனா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 2008-ல் திரைப்படம் தான் 'குசேலன்'. இந்த படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. இந்த படத்தில் "Om Zaarare" என்ற பாடலில்தான் மம்தா மோகன்தாஸ் ஒரே ஒரு சீனில் காட்சியளிப்பார். அதுவும் 2-3 நொடிகள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். அவர் அதில் பி.வாசுவுக்கு அசிஸ்டன்ட் ரோல் செய்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!