Cinema
“நாங்க பிரிவினைவாதியா?”: வாத்தியாராக மாஸ் காட்டும் விஜய் சேதுபதி: வெளியானது ‘விடுதலை' படத்தின் ட்ரெய்லர்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் வெற்றிமாறன், தற்போது 'விடுதலை' என்ற படத்தை இயக்கி வருகிறார். பிரபல நகைச்சுவை நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து இயக்கி வரும் இந்த படத்தின் கதையானது தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை உருவாக்கிய நிலையில், இந்த படத்திற்காக நடிகர் சூரி '6 பேக்' வைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் வெற்றிமாறனின் 'வட சென்னை ' போல் இரண்டு உருவாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தது.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. தொடர்ந்து இந்த படத்தின் முதல் பாடலான "ஒன்னோட நடந்தா.." என்ற பாடல் வெளியானது. இளையராஜா இசையில் உருவான இந்த பாடலை தனுஷ், அனன்யா பட் பாடியுள்ளனர்.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இந்த படத்தின் வெளியீடு எப்போது என்று எதிர்பார்க்க மகளிர் தினமான இன்று இதன் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இன்று இரவு 8 மணிக்கு இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்தது. இது தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்த நிலையில், தற்போது இதன் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து இந்த படத்தில் சூரி கதாநாயகனாக முதல் முறையாக அறிமுகமாகவுள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Also Read
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!