Cinema
“நான் ஒரு Action King.. இதில் மக்கள் வித்தியாசமாக பார்ப்பார்கள்..” - LEO படம் குறித்து அர்ஜுன் பேட்டி!
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். தமிழில் தவிர்க்க முடியாத திரை நட்சத்திரங்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.
இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். லோகேஷுடன் மாஸ்டர் படத்திற்கு பிறகு இணைந்த இவர், இந்த முறை இந்த படத்தின் மூலம் LCU-வில் இணைகிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்த படத்தில் நடிக்க போகும் நடிகர்கள் நடிகைகள் பட்டியலை அண்மையில் படக்குழு வெளியிட்டது.
அதில் பிரபல இந்தி நடிகரும் KGF 2 வில்லனுமான 'சஞ்சய் தத்', பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஸ்கின், மன்சூர் அலிகான், மாத்திவ் தாமஸ் (மலையாளத்தில் கும்பளங்கி நைட்ஸ், ஜோ அண்ட் ஜோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்), கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், திரிஷா உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் படக்குழு முழுவதும் காஷ்மீரில் இருக்கும் நிலையில் நடிகை த்ரிஷா மட்டும் சென்னைக்குத் திரும்பிய புகைப்படங்கள் கடந்த சில தினங்களுக்கு வெளியானது.
இதையடுத்து இந்த தகவலுக்கு நடிகை த்ரிஷாவின் தாய் உமா கிருஷ்ணா மறுத்துள்ளார். இது குறித்துக் கூறிய அவர், "லியோ படத்தின் பட பிடிப்பிற்காக த்ரிஷா காஷ்மீருக்கு சென்றுள்ளார். அவர் நடிக்கும் முக்கிய காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டு வருகிறது. அவர் 'லியோ' படத்தில் இருந்து விலகியதாகப் பரவும் செய்தி தவறானது" என தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து படம் காஷ்மீரில் எடுக்கப்பட்டு வருவது தொடர்பான புகைப்படத்தையும் லோகேஷ் நேற்று வெளியிட்டார். இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரும் அளவில் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதோடு இந்த படத்தின் மீதான ஆர்வம் இந்த படத்தில் நடிக்கும் திரைபட்டாளத்தின் மீதும் எகிறியுள்ளது.
இந்த நிலையில், லியோ படத்தில் நடிப்பது குறித்தும், அதில் தனது கேரக்டர் எப்படியிருக்கும் என்பது குறித்தும் நடிகர் அர்ஜூன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறேன்.
அவர் இயக்கிய கைதி மற்றும் விக்ரம் படங்களை பார்த்துள்ளேன். ரொம்ப வித்தியாசமா கதையை சொல்லக்கூடிய ஒரு இயக்குநர். அந்த படத்துல நான் நடிக்கிறேன் சொல்றப்ப பெருமையா தான் இருக்குது. அதேபோல் நான் விஜய் கூட இதுவரை நடிச்சது இல்ல. இந்த படத்துல நடிக்கிறது ஆர்வமா இருக்குது. அதேபோல் கதையும் வித்தியாசமான கதையாக அமைந்துள்ளது.
எனக்கு மக்கள் கொடுத்த டைட்டில் 'ஆக்ஷன் கிங்' என்பது உங்களுக்கு தெரியும். அதுபோல் தான் ரசிகர்கள் கிட்ட லோகேஷ் என்னை காட்டப் போறாரு. இந்த படத்தில் மக்கள் இதுவரை என்னைப் பார்க்காத கதாபத்திரத்தில் என்னை பார்ப்பாங்க” என்று பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?