Cinema
“GST அதிகாரி TO நடிகை”-263 கோடி பண மோசடி வழக்கில் சிக்கிய Bigg Boss போட்டியாளர்:யார் இந்த க்ரீத்தி வர்மா?
க்ரீத்தி வர்மா, 29 வயதுடைய மாடல் நடிகையான இவர், டெல்லியை சேர்ந்தவர். ஆரம்பத்தில் ஒன்றிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் GST இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்துள்ளது. எனவே மாடல் வேலையை செய்து வந்தார். அதன்பிறகு தனது வேலையை விட்டுவிட்டு முழுநேரமும் திரையில் கால் பாதிக்க எண்ணினார்.
அதன்படி ரோடீஸ் எக்ஸ்ட்ரீம் என்ற ஷோவில் முதலில் பங்கேற்றார். பின்னர் 2018-ம் ஆண்டு இந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 12 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் மூலம் அனைவர் மத்தியிலும் பிரபலமானார். அந்த சீசனில் பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்ட க்ரீத்தி, பிறகு மீண்டும் மாடலிங் செய்து வந்தார். இதை தொடர்ந்து இந்தி ஜீ டி.வியில் ஒளிபரப்பாக 'Tere Bina Jiya Jaye Na' என்ற தொடரில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் பண மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. மும்பை வருமான வரித்துறையில் கணக்குகளை தாக்கல் செய்து வரி விலக்கு பெறுவதில் சுமார் ரூ.263 கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக வருமான வரித்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது. அதன் பேரில், அதிகாரிகள் சி.பி.ஐ மற்றும் அமலாக்க துறையினர் தனித்தனியாக ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது க்ரீத்தி வர்மா வருமான வரித்துறையில் பணிபுரிந்த போது, போலியான ஆவணங்களை சமர்பித்து வரி விலக்கு பெற்ற குற்றவாளிகளுக்கு துணை போனதும் தெரியவந்தது. இந்த மோசடி 2007-08, 2008-09 நிதியாண்டுகளுக்கான வரி விலக்குகளை பெறும் சமயத்தில் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட பணம், ஷெல் நிறுவனங்கள் மற்றும் மும்பை தொழிலதிபர் பூஷன் பாட்டில் உள்ளிட்டோரது வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு க்ரீத்தி வர்மா வங்கி கணக்கிற்கு பூஷன் பாட்டில் சுமார் ரூ.1 கோடி பணம் வரை பரிமாற்றம் செய்திருந்தார். மேலும் 2021 ஆம் ஆண்டில் ஹரியானாவிலுள்ள குருகிராமில் சொத்து ஒன்றை சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளுடன் வாங்கியதாகவும், பின்னர் அதனை விற்று தனது வங்கிக் கணக்குகளில் பணத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டு அவருக்கு அமலாக்கத்துறை நோட்டிஸும் அனுப்பியது. இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அவர் நேரில் ஆஜரானார். தொடர்ந்து பண மோசடி குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக இரட்டை இலை பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!