Cinema
காரின் மேல் நின்ற பாலகிருஷ்ணா.. திடீரென வேகமெடுத்த ஓட்டுநர்.. தெலுங்கு நட்சத்திரத்துக்கு நேர்ந்த சோகம் !
தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரான பாலகிருஷ்ணா நடிப்பில் 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படம் உலகம் முழுவதும் வருகிற 12-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், வரலஷ்மி சரத்குமார், துனியா விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். பாலகிருஷ்ணாவுக்கு தெலுங்கு சினிமாவில் தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக உள்ளது. இந்த படம் அங்கு ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக ஓடிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரது தந்தை என். டி. ராமராவ் புகழ்பெற்ற நடிகராக இருந்ததோடு தெலுங்கு தேசம் என்ற கட்சியை உருவாக்கி ஆந்திராவின் முதல்வராகவும் வலம்வந்தார். அவரின் மகனான பாலகிருஷ்ணா தந்தையின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து தற்போது அக்கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ.வாகவும் இருக்கிறார்.
இவர் தனது சொந்த தொகுதியான இந்துபூரில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பிரச்சார வாகனத்தில் நின்றவாறு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் ஆகியோரை நோக்கி கைகளை அசைத்து தொகுதியில் வலம்வந்தார்.
கார் மெதுவாக சென்றுகொண்டிருந்த நிலையில், அவரின் வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர் திடீரென சிறிது வேகமாக சென்ற நிலையில், காரின் மேல் நின்றிருந்த பாலகிருஷ்ணா தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும் பாலகிருஷ்ணாவோடு இருந்தவர்கள் அவரை பிடித்துக்கொண்டதால் பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்துக்கு பின்னர் பாலகிருஷ்ணா சிறிது நேரம் ஓய்வெடுத்து பின்னர் மீண்டும் தனது தொகுதியில் காரில் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து பொதுமக்களை சந்தித்தார்.
Also Read
-
கிறிஸ்தவர்களை குறிவைக்கும் இந்துத்துவ கும்பல்... தமிழக ஆயர் பேரவை தலைவர் கண்டனம் - விவரம்!
-
“முடிஞ்சா...” - எச்.ராஜா, பழனிசாமி, அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
“நாடாளுமன்றத்தில் தமிழ் முழக்கம் - தாய்மொழிக்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டு MP-க்கள்” - முரசொலி புகழாரம்!
-
குடும்பத்தினர் வருகையால் குதூகலமான BB வீடு : பாரு-கமரு தனி தனியா game ஆடுங்க என்று அறிவுரை கூறிய நண்பன்!
-
ரயிலுக்கு இடையே சிக்கிக் கொண்ட பெண் : உயிர் காத்த RPF வீரர் - குவியும் பாராட்டு!