Cinema
திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனோபாலா.. செய்யப்பட்ட அறுவை சிகிச்சை.. அவருக்கு என்னாச்சு ?
பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1979ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் படத்தில் துணை இயக்குநராக பணியாற்றிய இவர், அதே படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரைக்கு அறிமுகமானார். அதன்பிறகு சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர், 1982-ல் வெளியான ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அதன்பிறகு பல படங்களில் முக்கிய வேடங்கள். காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், சுமார் 25-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். தொடர்ந்து காமெடிகளில் நடித்து வரும் இவர், காமெடி நடிகராகவே அறியப்படுகிறார். முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ள இவர், தமிழ் மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்துள்ளார்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட இவர், 2014-ல் வெளியான சதுரங்க வேட்டை திரைப்படத்தை தயாரித்துள்ளார். இதற்காக சிறந்த தயாரிப்பாளர் விருதை பெற்ற இவர், தொடர்ந்து பாம்பு சட்டை என்ற படத்தையும் தயாரித்தார். அதன்பிறகு விரைவில் வெளியாக இருக்கும் சதுரங்க வேட்டை 2 என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென அவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது.
ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு தற்போது ஓய்வில் இருக்கும் நடிகர் மனோபாலாவை நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இவர் இந்த செய்தி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் சிகிச்சை பெற்று ஓய்வில் இருப்பது தொடர்பான புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து அவரது உடல்நலம் பற்றி ரசிகர்கள் பலரும் இணையத்தில் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். மேலும் அவருக்கு விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் அண்மையில் சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் வெளியான 'வால்டர் வீரய்யா' என்ற படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து விஜயின் 67-வது படத்தில் முக்கிய வேடத்தில் இவர் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!