Cinema
தூக்கத்தில் எழுந்து ‘ரஞ்சிதமே..’ பாடலுக்கு Vibes செய்த குழந்தை.. வைரலாகும் குட்டியின் Cute வீடியோ !
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். தமிழில் தவிர்க்க முடியாத திரை நட்சத்திரங்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தான் வாரிசு. பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்ட இந்த படம் தற்போது வரை உலக அளவில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. 200 கோடிக்கும் மேல் வசூலிட்டியுள்ள இந்த படம் இந்த பொங்கல் வின்னராக ரசிகர்களால் கொண்டாப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ரஞ்சிதமே பாடல்தான் முதலில் இந்த படத்திலிருந்து வெளியான பாடல். சில விமர்சங்களுக்கு உள்ளானாலும் குழந்தைகள், ரசிகர்கள், குடும்பங்கள் மத்தியில் பெரிதளவு ஈர்க்கப்பட்டது. பல நாட்களாக நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருந்த இந்த பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டு வந்தனர்.
இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த பாடலை நடிகர் விஜய் மற்றும் மானசி பாடியுள்ளார். விஜயுடன் ரஷ்மிகா ஆடியுள்ள நடனம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த பாடல் திரையரங்கில் கூட ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் வீட்டில் சிறு குழந்தை ஒன்றி தூங்கி கொண்டிருந்தது. அப்போது குழந்தையின் வீட்டாளர்கள் 'ரஞ்சிதமே' பாடலை ஒலித்தனர். அப்போது தூங்கிக்கொண்டிருந்த குழந்தை எழுந்து நின்று அந்த பாடலுக்கு வைப்ஸ் செய்ய தொடங்கியது.
இது தொடர்பான வீடியோவை இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!