Cinema
“8 வருடம்.. ரொம்ப வலிக்குது.. வயசாகுறதுக்குள்ள அஜித் சாரை மீட் பண்ணனும்..” -பிரேமம் பட இயக்குநர் உருக்கம்
தமிழில் கடந்த 2013-ல் நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் 'நேரம்'. இப்படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகில் அறிமுகமானாவார்தான் அல்போன்ஸ் புத்ரன்.
அதன்பிறகு இவரது இயக்கத்தில் மலையாளத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா, அனுபமா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பிரமேம் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். மாஸ் ஹிட் கொடுத்த இப்படத்தின்மூலம் இந்திய திரையுலகிற்கு அறிமுகமானார்.
அதிலும் தமிழ்நாட்டில் இந்த படம் கல்லூரி மாணவர்களின் பெரும் அபிமானத்தை பெற்று மாபெரும் ஹிட் ஆனது. குறிப்பாக சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது.
பிரேமம் படத்திற்கு பிறகு இவர் படம் எதுவும் இயக்கத்தால் ரசிகர்கள் அவ்வப்போது கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2022-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'கோல்டு' படத்தை இயக்கினார்.
பிருத்விராஜ், நயன்தாரா, செம்பன் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் அல்போன்ஸ், நடிகர் கமல்ஹாசனை சந்தித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றையும் பதிவிட்டார்.
அப்போது இவரது பதிவின் கமெண்டில் ரசிகர் ஒருவர் “தல கூட (அஜித்) ஒருப்படம் பண்ணுங்க தலைவா” என்று பதிவிட்டுள்ளார். ரசிகரின் கமெண்டுக்கு இயக்குநர் அல்போன்ஸ் பதிலளித்துள்ளார். அதில், “இது குறித்து அவர் கூறியதாவது: அஜித் குமார் சாரை இதுவரைக்கும் மீட் பண்ண முடியல. நிவின் ஒருமுறை அஜித் சாருக்கு பிரேமம் படம் பிடித்துள்ளதாகவும், அதிலும் அந்த களிப்பு பாடல் மிகவும் பிடித்துள்ளதாவும் கூறினார்.
அதன் பிறகு, நான் குறைந்தது 10 முறையாவது சந்திக்க வேண்டும் என்றும் அவரது ரைட் ஹாண்ட் மற்றும் மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் அஜித் சாரை சந்திக்க வேண்டி கேட்டு இப்போது 8 வருஷம் ஆகிறது. எனக்கு வயதாவதற்குள்ளாக அஜித் ஸாரை பார்த்தால் படம் பண்னுவேன்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் இந்த கேள்வியை கேட்கும்போது எனக்கு எவ்வளவு வலிக்கும் தெரியுமா தம்பி? முயற்சி செய்து செய்து நான் சோர்வடைந்து விட்டேன். நீங்கள் கேட்கும்போது முதலில் கோவம் வரும். பின்னர் நீங்களும் என்னை மாதிரி ஒரு AK ரசிகரென நினைத்து அமைதியாக கடந்து விடுவேன்.
AK சாரை வைத்து படம் எடுத்தால் ஹாலிவுட், கோலிவுட் திரையரங்குகளில் படம் 100 நாள் ஓடும். இதே மாதிரிதான் உலகநாயகன், சூப்பர் ஸ்டார், தளபதியுடனும்.” என்று பதிவிட்டிருந்தார். இவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!