Cinema

நடிகை சமந்தாவை தொடர்ந்து.. கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு நடிகை: Instagram-ல் உருக்கம்!

2005ம் ஆண்டு வெளியான 'மயோக்கம்:' என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் மம்தா மோகன்தாஸ். இதன் பிறகு மலையாளம், தமிழ், தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் 'சிவப்பதிகாரம்', 'தடையற தாக்கு', 'குசேலேன்','குரு என் ஆளு' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காகச் சிகிச்சை எடுத்து வந்ததால் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார்.

பின்னர் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்து மீண்டும் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் விட்டிலிகோ என்ற ஆட்டோ இம்யூன் நோயால் பாதித்துள்ளதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மம்தா மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.

அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில், "என்னுடைய நிறத்தை இழந்து கொண்டிருக்கிறேன். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது உங்களது அன்பைக் கேட்டுக் கொள்கிறேன்" என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை அடுத்து மம்தா மோகன்தாஸ்-க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காகச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அதுபோன்ற நோயால் நடிகை மம்தா மோகன்தாசும் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்!