Cinema

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்!

ராஜ்கிரண் நடிப்பில் வெளியான 'என் ராசாவின் மனசிலே' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலக்கு அறிமுகமானவர் தான் நடிகர் வடிவேலு.

அந்த படத்திற்கு பிறகு பல்வேறு படங்களில் காமெடி, குணச்சித்திர வேடத்தில் நடித்த இவர், 'போடா போடா புண்ணாக்கு', 'எட்டணா இருந்தா எட்டூரும் என் பாட்ட கேட்கும்..' ஆகிய பாடல்களின் மூலம் பாடகராகவும் அறிமுகமானார்.

கரத்த குரலில் இவர் பாடினாலும், இவரது குரலுக்கும் ரசிகர்கள் குவிந்தனர். அதன் பின்னர், பல படங்களில் ரஜினி, விஜய், அஜித், விஜய், கமல், விக்ரம், சிம்பு, ஜெயம்ரவி உள்ளிட்ட பல முன்னனி ஹீரோக்களுடன் காமெடி மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடித்து புகழ் மேல் புகழ் பெற்றார். இதையடுத்து பெரிய அளவில் பெயர் கொடுத்து இன்றும் நிலைத்து நிற்கும் படமான 'இம்சை அரசின் 23-ம் புலிகேசி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன்பின்னர் சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அது அவருக்கு பெரிதாக பெயர் ஈட்டிக்கொடுக்கவில்லை. எனவே மீண்டும் காமெடி தளத்தில் இருந்தார். கிட்டத்தட்ட 35 வருடங்களாக சினி உலகில் நீடித்து இருக்கும் வடிவேலு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சில பிரச்னை காரணமாக திரையில் தோன்றாமல் இருந்தார். அதன்பின்னர் மீண்டும் தோன்ற தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், சென்னையில் திரைப்படத்தில் நடித்து வந்த நடிகர் வடிவேலு மதுரையில் குடும்பத்தோடு வசித்து வந்தார். இந்நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (87) உடல்நலக்குறைவால் வீட்டிலேயே சிகிச்சையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு உடல்நலக்குறைவால் வடிவேலுவின் தாயார் சரோஜினி காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் வடிவேலு கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.