Cinema
“ஏகப்பட்ட EMI ல நாடே கிடக்கு.. ” -வெளியானது ‘காசேதான் கடவுளடா’ பாடல்.. 1 மணி நேரத்தில் 1M பார்வையாளர்கள்
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'வலிமை' படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் பல கேளிக்கையான விஷயத்தை செய்து வந்தனர்.
இருப்பினும் இந்த படத்தில் அப்டேட்-ஐ படக்குழுவினர் ரகசியமாகவே வைத்திருந்தனர். எனினும் படம் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
முன்னதாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' என இரு படங்கள் வெளியான நிலையில், தற்போது இவர்களது கூட்டணி மூன்றாம் முறையாக இணைந்துள்ளது. அதன்படி தற்போது எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் தான் 'துணிவு'.
இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ஆமிர், மமதி சாரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் பண்டிகையை ஒட்டி விஜய் - அஜித் படம் நேருக்கு நேர் மோதும் என்று திரைவட்டாரங்கள் தெரிவித்தது. அந்த வகையில் தற்போது விஜயின் வாரிசும், அஜித்தின் துணிவும் போட்டிபோடும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் பாடலான அனிருத் பாடியுள்ள 'சில்லா சில்லா' கடந்த 9-ம் தேதி வெளியாகியது. தற்போது 8 நாட்களாக நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருக்கும் இப்பாடல், சுமார் 19 மில்லியன் பார்வையாளர்களை கிடந்துள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான "காசேதான் கடவுளடா.." வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்பாடலை, பாடகர் வைசாக் எழுதி பாடியுள்ளார். பின்னணி குரலாக நடிகை மஞ்சு வாரியர், ஜிப்ரான் குரல் கொடுத்துள்ளனர். பாடல் வெளியாகி ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!