Cinema

எத்தனை நிமிடம்.. யாருடைய பாட்டை அதிகம் கேட்டு இருக்கீங்க? : அறிமுகமானது 'SPOTIFY WRAPPED 2022'..

இசை என்பது நம் வாழ்வில் அன்றாடம் நம்முடன் பயணிக்கும் ஒன்றாகும். நாம் எந்த மன நிலையில் இருந்தாலும் நம்மை ஊக்கப்படுத்தும் ஒரு கருவி தான் இசை. பாடல் என்பதும் அதே போல் தான். சிறு வயதில் தாய்மார்களின் தாலாட்டு பாடலில் இருந்து இறுதி அஞ்சலியின் போது ஒப்பாரி பாடல் வரை நம் வாழ்வில் இவையனைத்தும் ஒன்றியே இருக்கிறது.

உலகத்தில் இசை பிடிக்காதவர்கள் என்றும் யாரும் இருக்க முடியாது. அப்படி பட்ட இசை பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் spotify என்ற ஆப். இந்த கடந்த 2006-ம் ஆண்டு வெளியான இந்த ஆப் வாயிலாக நாம் உலகில் உள்ள எந்த மொழிகளில் வேண்டுமானாலும் பாடல் கேட்க முடியும். நமக்கு எந்த படத்தின் பாடல் வேண்டுமோ அதனை தேடி நம்மால் கேட்க இயலும்.

இந்த ஆப்பை சுமார் இந்த ஆண்டு (2022) வரை சுமார் 433 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் நமக்கு பிடித்த இசையமைப்பாளர் பாடல்களையும் நம்மால் கேட்க இயலும். எனவே நம் இன்பம், துன்பம், காதல் என நமக்கு எந்த மூடில் எந்த பாட்டு கேட்க வேண்டுமோ நாம் எளிதாக கேட்கலாம்.

இந்த நிலையில் இந்தாண்டு (2022) முடிய இன்னும் 30 நாட்களே இருக்கும் நிலையில், Spotify தனது பயனர்களுக்கு புதிய தகவல்களை கொடுக்க விரும்பியுள்ளது. அந்த வகையில் 'SPOTIFY WRAPPED 2022' என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் பயனர்கள் இந்தாண்டு அதிகம் தேடி கேட்ட பாடல்கள், யாருடைய பாடல்கள், எவ்வளவு மணி, எத்தனை மொழிகளில், எத்தனை நாடுகளைச் சேர்ந்த பாடல்களை கேட்டு ரசித்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள இயலும்.

இந்த SPOTIFY WRAPPED 2022 மூலம் தங்கள் இசையினை இவ்வளவு பேர் ரசித்துள்ளனர் என முன்னணி இசைத்துறையில் இருக்கும் இசையமைப்பாளர்கள், பாடகர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, அனைவரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசைப்புயல் AR ரகுமானின் பாடல்கள் 1.6 பில்லியன் ஸ்ட்ரீமிங் ஆகிறது, பாடல்களை கேட்டவர்கள் 57.7 மில்லியன், 110 மில்லியன் மணி நேரம், 183 நாடுகளில் இருந்து கேட்கப்பட்டுள்ளது.

இதனை AR ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "#எல்லாப்புகழும்இறைவனுக்கே.. பாடலாசிரியர்கள், பாடகர்கள், இயக்குநர்கள், திரைக்கதை எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்படப் பாடல்களில் ஈடுபட்டுள்ள திறமையான கலைஞர்கள், என்னுடன் 24/7 பணிபுரியும் என் அன்பான குழுவினர் அனைவருக்கும் நன்றி! மற்றும் அனைத்து ரஹ்மானியர்களுக்கும்" என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் அனிருத் பாடல்கள் 1.5 பில்லியன் ஸ்ட்ரீமிங், பாடல்களை கேட்டவர்கள் 31 மில்லியன், 80.7 மில்லியன் மணி நேரம், 182 நாடுகளில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. இதனை தனது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அனிருத், அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுபோல் பாடகி ஆண்ட்ரியா, ஸ்ரேயா கோஷல், யுவன் சங்கர் ராஜா என இசைத்துறையில் இருக்கும் முக்கிய பிரபலங்கள் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இசை பிரியர்களுக்கு தாங்கள் யார் பாடலை எவ்வளவு மணி நேரம் கேட்டுள்ளோம், அதில் டாப் 5 பாடல்கள் என்ன?, டாப் 5 இசையமைப்பாளர்க யார் ? என்பதையும் அறிந்து தங்களது வலைதள பக்கத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

Also Read: ஈவ் டீசிங் செய்வதை தட்டி கேட்ட கேரள மாணவிக்கு அடி உதை.. முடிவெட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் !