Cinema
Thor-க்கு இருக்கும் அரிய வகை நோய்.. சினிமாவில் இருந்து ஓய்வெடுக்கப்போவதாக அறிவிப்பு.. சோகத்தில் ரசிகர்கள்
பிரபல ஹாலிவுட் நடிகரான க்ரிஸ் ஹேம்ஸ்வர்த், தான் சினிமாவில் இருந்து சில காலம் விளக்கப்போவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் சினி ரசிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அதுவும் ஹாலிவுட் படத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதிலும் மார்வெல்ஸ் மற்றும் டி.சி யுனிவர்ஸ் தொடர்பான அனைத்து படங்களும் அனைத்து நாடுகளிலும் பல்வேறு மொழிகளில் திரையிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அந்த வகையில் க்ரிஸ் ஹேம்ஸ்வர்த் மார்வெல்ஸ் யுனிவெர்சில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியுள்ளார். மார்வெல்ஸ் யுனிவெர்சில் 'தோர்' (Thor) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவருக்கு உலகளவில் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். 2009-ம் ஆண்டு வெளியான 'ஸ்டார் ட்ரேக்' என்ற படத்தில் அறிமுகமான இவர், தனது 4-வது படமாக மார்வெல்ஸ் படத்திலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தோர் படத்திற்கு பிறகும் சில படங்களில் நடித்திருந்தாலும், மார்வெல்ஸ் யுனிவெர்சின் படங்களே இவருக்கு எக்கச்சக்க ரசிகர் கூட்டத்தை சேர்த்துள்ளார். இவர் படங்களில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் க்ரிஸ் ஹேம்ஸ்வர்த், தான் திரைத்துறையில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதற்கான காரணத்தையும் தனது ரசிகர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார். National Geographic வெளியிடும் 'Limitless With Chris Hemsworth' என்ற ஷோவில் க்ரிஸ் ஹேம்ஸ்வர்த் கலந்துகொண்டுள்ளார்.
அட்வென்சர் டாக்குமென்டரியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடரில், ஸ்கை டைவிங் செய்வது, நெருப்பு நிறைந்த வீட்டிற்குள் நுழைவது, பனி சறுக்கு செய்வது என தனது உயிரைப் பணையம் வைப்பது போன்ற சாகசங்களில் ஈடுபடுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு எபிசோடில் தனக்கு இருக்கும் பிரச்னை குறித்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், "பெற்றோர்களிடமிருந்து APOE4 எனப்படும் ஒரு வகை ஜீன் எனக்கு இருக்கிறது. இவ்வகை ஜீன் இருப்பவர்கள், எளிதாக மனம் சம்பந்தப்பட்ட நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகுபவர்களாக இருப்பார்கள். நம் நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும். அவைதான் நம்மை வடிவமைத்து, நம்மை நாமாக இருக்க உதவும். இந்த நோய் வந்தால், என் மனைவியையோ அல்லது என் குழந்தைகளையோ என்னால் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது என்ற எண்ணம் எனது மிகப்பெரிய பயமாக இருக்கிறது" என்றார்.
மேலும் "இந்த ஷோ எனக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சிறிது நாட்கள் படங்களில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்." என்றார். இவரது இந்த அறிவிப்பு மற்றும் இவரது அரிய வகை நோய் பற்றிய தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!