Cinema

பிரபல தமிழ் சீரியல் நடிகரின் மனைவி மரணம்.. Diet இருந்ததால் வந்த சர்க்கரை நோய் காரணமா ?

உடல்நிலை பாதிப்பு காரணமாக பிரபல சின்னத்திரை நடிகர் பரத் கல்யாணின் 43 வயதுடைய மனைவி உயிரிழந்துள்ளது தற்போது திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 90ஸ் கிட்ஸ் சீரியல்கள் மூலம் மிகவும் பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் பரத் கல்யாண். இவர் அதற்கு முன்பே பல சீரியல்களில் நடித்திருந்தாலும், ஜென்டில்மேன், சுள்ளான், பயணம் உள்ளிட்ட ஒரு சில படங்கள் நடித்துள்ளார்.

தற்போது ஒரு சில தனியார் தொலைக்காட்சி சீரியலில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவருக்கு திருமணமாகி பிரியதர்ஷினி என்ற மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது மனைவி நடிகர் பரத்துடன் சேர்ந்து சில ரியாலிட்டி ஷோவிலும் கலந்துகொண்டுள்ளார்.

இந்த நிலையில் பரத்தின் நெருங்கிய நண்பரான ராஜ் கமல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரத்தின் மனைவி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

பரத்தின் மனைவி இறப்பு குறித்து பரத்தின் நண்பரும், நடிகருமான ரிஷி கூறுகையில், "கடந்து சில மாதங்களாகவே பிரியா சர்க்கரை நோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் 'பேலியோ டயட்' என்ற டயட் முறையை பின்பற்றினார்.

இந்த டயட் முறையை பின்பற்றியதால் அவருக்கு டயாபடிக் அதிகமானது. எனவே அதற்காக சிகிச்சை எடுத்தபோதிலும், அவரது உடல்நிலை மோசமாக காணப்பட்டது. மேலும் கோமாவில் கூட பிரியா இருந்தார். ஆனால் தற்போது அவர் திடீரென்று உயிரிழந்துவிட்டார்" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பேலியோ டயட் முறையை பின்பற்றியதால் தான் பிரியா உயிரிழந்ததாக கூறப்படும் வதந்திக்கு பிரபல மருத்துவர் ஒருவர் கூறுகையில், "பேலியோ டயட் ஃபாலோ பண்ணதால டயாபடிக் வந்துடுச்சு” என்று ஏதோ ஒரு பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

ஆனால் MBBS மருத்துவர்களின் அறிவுரை படி பேலியோ டயட் ஃபாலோ பண்ணா டயாபடிக் வராது. டயாபடிஸ் சரியாத்தான் செய்யும், அல்லது நோயின் வீரியம் குறையும். ஆனால் பிரச்னை எங்கு வருகிறது என்றால் மாத்திரைகளை நிறுத்துவதில்தான். முறையான மருத்துவ அடிப்படை அறிவில்லாதவர்களின் அறிவுரைகளை கேட்டு மாத்திரைகளை நிறுத்தினால் தான் பிரச்னை.

எனவே தகுதியான மருத்துவர்கள் அறிவுரை இல்லாமல் இது போன்று டயட் அல்லது வேறெதுவோ நாம் எடுத்துக்கொள்ள கூடாது. முறையான டயட் பின்பற்றினால் இது போன்று எதுவும் நேராது " என்றார்.

Also Read: தங்கையை கிண்டல் செய்த 2 சிறுவர்கள்.. தட்டிக்கேட்ட சகோதரனுக்கு நேர்ந்த கொடுமை: டெல்லியில் கொடூரம்! | VIDEO