Cinema

வீட்டில் இருந்து ரூ. 9 லட்சம் மதிப்பிலான 2 கைக்கடிகாரம் திருட்டு.. போலிஸில் புகார் கொடுத்த பிரபல நடிகை!

தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர். இவர் அஜித்குமார் நடத்த 'என்னை அறிந்தால்','ஜெயம் ரவி' நடத்த நிமிர்ந்து நில் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டெர்லிங் சாலையில் பார்வதி நாயர் வசித்து வருகிறார். இவர் சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், "தனது வீட்டில் இரண்டு வருடமாக வேலை பார்த்துவந்தவர் ரூ. 6 லட்சம் மதிப்பிலான ஒரு கை கடிகாரமும், ரூ.3 லட்சம் பதிப்பிலான மற்றொரு கை கடிகாரமும், ரூ.50 ஆயிரம் மதிப்புடைய லேப்டாப், செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளதாக" தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல நடிகை வீட்டில் விலை உயர்ந்த கை கடிகாரம் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இனி பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் சிக்கல்.. அமலுக்கு வந்த புதிய போக்குவரத்து விதி என்ன தெரியுமா?