Cinema
பிரபல நடிகையை ஷட்டரை மூடி கடைக்குள் அடைத்துவைத்த ஷோரூம் ஊழியர்கள்.. பயத்தில் அழுததாக நடிகை பேட்டி !
பல மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்தவர் அன்னா ரேஷ்மா ராஜன். இவர் தனது அம்மாவின் செல்போனிலுள்ள சிம்கார்ட்டில் பிரச்சனை ஏற்பட்டதால் வேறு டூப்ளிகேட் சிம் கார்டு வாங்க ஆலுவா பகுதியில் உள்ள நிறுவனத்தின் ஷோரூமுக்கு சென்றுள்ளார்.
பிரபலமானவர் என்பதை பிறருக்கு ஆதாயம் தெரியக்கூடாது என்பதற்காக மாஸ்க் அணிந்து, ஷால் கொண்டு தலையில் மூடிக்கொண்டு அங்கு சென்றுள்ளார். ஆனால் அங்குள்ள 25 வயதுடைய பெண் மேலாளர் இவரிடம் முறையாக பதில் கூறாமல் இருந்துள்ளார். இதனால் அவர் குறித்து புகார் அளிக்க அவரை புகைப்படம் எடுத்துள்ளார்.
தன்னை குறித்து புகார் கொடுக்க புகைப்படம் எடுத்ததை உணர்ந்த அந்த மேலாளர் உடனடியாக அங்கிருந்த ஊழியர்களை அழைத்து நிறுவனரின் ஷட்டர்களை மூடுமாறு கூறியுள்ளார். அதன்படி ஊழியர்கள் ஷோரூமின் ஷட்டரை மூடி ரேஷ்மா ராஜனின் கையை பிடித்து இழுத்து அங்கிருந்த சேரில் அமரவைத்துள்ளனர். இதில் ரேஷ்மா ராஜனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து போலிஸாரை தொடர்புகொள்ள முயன்ற ரேஷ்மா ராஜன் அது முடியாததால் தனது தந்தைக்கு நெருக்கமானவர்களிடம் இது தொடர்பாக போனில் அழைத்து கூறியுள்ளார். அதன்படி போலிஸுக்கு தகவல் தெரிவித்த அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.
அதன்பின்னர் போலிஸ் வந்த பின்னர் ஷோரூமின் ஷட்டர் திறக்கப்பட்டு ரேஷ்மா ராஜன் வெளியே அழைத்துவரப்பட்டுள்ளார். இது குறித்து ஆலுவா காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பேசிய ரேஷ்மா ராஜன், "போலீஸ் வரும்வரை இங்கிருந்து வெளியே போக மாட்டேன்' எனக் கூறி வருத்தத்தில் அழுதுவிட்டேன். அதற்கு என்னிடம் போட்டோவை டெலிட் செய்யும்படி சொன்னார்கள். நானும் போட்டோவை டெலிட் செய்துவிட்டேன்.
காவல் நிலையத்துக்கு வந்த ஷோரூம் ஊழியர்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்டனர். ஒருவரை வேலையைவிட்டு நீக்கவைப்பது எளிது. ஆனால் அவருக்கு வேலை வாங்கிக் கொடுப்பது கடினம் என்பதால், நான் அந்தப் பெண் மேலாளரை மன்னித்து விட்டுவிட்டேன்." என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?
-
VBGRAMG சட்டம் ஒழிக! : ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
-
“பாசிஸ்ட்டுகளின் வஞ்சக சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு : பா.ஜ.கவின் ஆணவத்துக்கு அடி கொடுத்த நீதிமன்றம் - முரசொலி!