Cinema
"மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் போண்டாமணிக்கு நான் கண்டிப்பாக உதவுவேன்"-நடிகர் வடிவேலு உறுதி
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் போண்டாமணி. இவர் பிறகு, சுந்தரா டிராவல்ஸ், வின்னர், ஆயுதம், மருதமலை போன்ற பல படங்களில் வடிவேலுவுடன் போண்டாமணி நடித்துள்ளார். மேலும் படிக்காதவன், திருமலை, தாமிரபரணி, வேலாயுதம் என பல படங்களில் காமெடி தோற்றத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் போண்டாமணி அவதிப்பட்டு வந்துள்ளார். இதயடுத்து இரண்டு கிட்னியும் செயல் இழந்துள்ள அவர் சில நாட்களுக்கு முன்பு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து, "இரண்டு கிட்னியும் செயல் இழந்து சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் போண்டாமணிக்கு உதவ வேண்டும்" என சக நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க பேசிய வீடியோ இணையத்தில் பரவி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் போண்டாமணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், மருத்துவர்களிடம் சிகிச்சைக் குறித்துக் கேட்டறிந்ததோடு, சிகிச்சைக்கான செலவு முழுவதையும் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஏற்கும்" என நடிகர் போண்டாமணியிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இந்த நிலையில் பிரபல முன்னணி காமெடி நடிகர் வடிவேலு நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பிறகு வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "என்னுடன் பல படங்களில் நடித்தவர் நடிகர் போண்டா மணி. அவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இருக்கும் செய்தி அறிந்தேன். மிகுந்த வேதனையளித்தது. அவருக்கு நான் நிச்சயம் உதவி செய்வேன்" என்றார்.
மேலும் "நான் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இதில் இயக்குனர் மாரி செல்வராஜ்ஜின் மாம்மன்னன் திரைப்படத்தில் தான் குணசித்திர நடிகனாக நடித்து இருக்கிறேன். மாமன்னன் திரைபடத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்துள்ளேன். படம் நன்றாக வந்திருக்கிறது. நடித்து வருக்கின்ற படங்கள் அனைத்தும் காமெடியில் சிறந்ததாக இருக்கும்.
நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தில் பாடலும் பாடியுள்ளேன். அந்தப் பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் என நம்புகிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
Also Read
- 
	    
	      
தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக 2 பேர் நியமனம் : கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
 - 
	    
	      
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
 - 
	    
	      
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!
 - 
	    
	      
கோவை இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை : பதுங்கியிருந்த 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்!
 - 
	    
	      
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!