Cinema
நடிகர் சூரியின் உணவகத்தில் திடீர் சோதனை.. நேரில் ஆஜராக கெடு விதித்து உத்தரவிட்ட வணிகவரித்துறை !
மதுரை மாவட்டம் தெப்பக்குளம் அடுத்த காமராஜர் சாலையில் அமைந்துள்ளது 'அம்மன் ஹோட்டல்'. நடிகர் சூரிக்கு சொந்தமான இந்த ஹோட்டலை கடந்த சில வருடங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த ஹோட்டலுக்கு முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்தார்.
இந்த அம்மன் ஹோட்டலின் கிளைகள் அரசு மருத்துவமனை , சந்திப்பு , ஊமச்சிக்குளம் , கடச்சனேந்தல் , நரிமேடு , ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைந்துள்ளது. சைவ உணவகமான இதற்கு அந்த பகுதியில் வரவேற்பும் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் நடிகர் சூரிக்கு சொந்தமான இந்த அம்மன் ஹோட்டலில் விற்கப்படும் உணவுகள் ஜி.எஸ்.டி வரி இல்லாமல் விநியோகிக்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து தெப்பக்குளம் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் இயங்கி வரும் ஹோட்டலில் வணிக வரித்துறையினர் அதிகாரி செந்தில் தலைமையில் 5 பேர் கொண்ட குழு சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் எழுந்த புகார்கள் உண்மை என்றும், மேலும் உணவகத்துக்கு மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லை என்றும் தெரியவந்தது. இதையடுத்து உணவக உரிமையாளர் சூரி இன்னும் 15 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு வணிகவரித்துறையினர் உதார்விட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!