Cinema

ஆக்ஷன் திரில்லர்.. ரசிகர்களின் ஏக்கத்தை திருப்திப்படுத்திய ‘The Roundup’ திரைப்படம் - சினிமா விமர்சனம் !

ரவுண்டப் திரைப்படம் 2022ல் வெளியான ஒரு தென்கொரிய ஆக்ஷன் திரில்லர் திரைப்படம். மா டாங் சியோக் நடிப்பில் உருவாகி இருக்கக்கூடிய இந்த திரைப்படம் 2017 ல் வெளியான தி அவுட்லாஸ் திரைப்படத்தின் உடைய இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இரண்டு கதைகளும் தனிப்பட்ட கதைகள் தான். இது ஒரு அடிப்படை போலீஸ் திரைப்படம்: குற்றவாளிகள் கெட்டவர்கள், போலீஸ்காரர்கள் நல்லவர்கள் என்று காலம் பூராவும் காட்டுகிற மாயக்கன்னாடியைத் தான் இந்த படமும் காட்டுகிறது.

மக்களை சித்திரவதை படுத்துகிற ஒரு கிரிமினல் கொரியாவிலிருந்து வியட்நாம்க்கு தப்பிச் செல்கிறான். அவனைத் தேடிக் கண்டுப்பிடிப்பதற்காக ஹீரோ வும் அவருடைய கேப்டனும் வியட்நாம் செல்கிறார்கள். அங்கு நடக்கக்கூடிய சுவாரசியமான காட்சிகள்தான் திரைக்கதை.

படத்தினுடைய தொடக்கத்தில் தென் கொரியாவில் உள்ள முக்கியமான குற்றவாளிகள் வியட்நாமிற்கு தப்பி சென்று அங்கு வரக்கூடிய கொரியன் டூரிஸ்ட் களையும் தொழிலதிபர்களையும் மிரட்டி பணம் பறிக்க கூடிய வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள் என செய்தி வருகிறது. அதில் ஒரு குற்றவாளி தான் செய்த தப்பையெல்லாம் ஒத்துக்கொண்டு வியட்நாம் போலீசாரிடம் சரண் அடைந்து விட்டதாக தகவல் கிடைக்கவே அவனை தென் கொரியா விற்கு அழைத்து வருவதற்காக ஹீரோவும் கேப்டனும் செல்கிறார்கள் வியட்நாம் செல்கிறார்கள்.

அங்கு சென்று பார்த்தால் தான் தெரிகிறது அங்கு பல கொரிய டூறிஸ்ட்கள் காணாமல் போயிருக்கிறார்கள் என்பது இந்நிலையில் சரண்டர் ஆன குற்றவாளி மூலமாக வில்லன் செய்து கொண்டிருக்கக் கூடிய செயல்களை கண்டுபிடிக்கிறார் ஹீரோ. அவன் கொடுத்த தகவலின்படி வில்லன் உடைய இடத்தை சோதனையிடும் போது அங்கு நான்கு டெட் பாடிகள் புதைக்கப்பட்டிருக்கிறது.

அதில் ஒன்று கொரியாவில் மிகப் பெரிய பிசினஸ் மேன் உடைய பையன். தன் பையனை கொலை செய்ததற்காக வேறு ஒரு கும்பலை வில்லணை கொலை செய்ய அனுப்புகிறார் பிசினஸ் மேன். வில்லனோ வந்த ஆட்களை எல்லாம் கொன்றுவிடுகிறான். அந்த நேரம் பார்த்து போலீஸ் உள்ளே செல்ல வில்லன் கேப்டனை தாக்கிவிட்டு தப்பிச் செல்கிறான்.

ஹீரோவும் கேப்டனும் உடனடியாக நாடு திரும்ப வலியுறுத்தபடவே அவர்கள் நாடு திரும்பி விடுகிறார்கள். வில்லணும் பிசினஸ் மேனனைக் கொலை செய்வதற்காக கொரியா வருகிறான். இத்தகவல் போலீஸிற்க்கு தெரியவே அதன்பிறகு அவர்கள் ஒருபுறம் வில்லணை தேடி செல்கிறார்கள்.

வில்லன் பிசினஸ் மேனைக் கொலை செய்தானா ? போலீஸ் வில்லணை பிடித்தார்களா? அதன் பின்பு கொரியாவில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. கதை முழுக்க ஆக்ஷன், த்ரில்லர், காமெடி என ஆடியன்ஸை எங்கேஜெட் ஆக வைத்திருக்கக்கூடிய படம்தான் இது. என்னதான் மாஸ் ஆக்ஷன் படமாக இருந்தாலும் போலீசார் அவ்வப்போது ஈடுபடும் சில சித்திரவதைகளை கூட நல்ல விஷயத்திற்காக செய்வது தான் என்று காட்டுற கதைக்களங்கள் தான் அதிகம். அதற்கு இந்த படமும் விதிவிலக்கு அல்ல.

ஆக்சன் தூக்கள் நகைச்சுவை தேவையான அளவு, கூட கொஞ்சம் திரில்லர், ரத்தம், கொலை என்று படம் கண்ணுக்கு ஒரு அறுசுவை விருந்து போலதான் இருக்கிறது. பார்வையாளர்களை ஐயோ, அடடா, என்று ஒரு பதட்டத்தில் வைத்திருப்பதிலும் படம் கொஞ்சம் கூட பின்வாங்கவில்லை. நல்ல ஆக்‌ஷன்/காமெடிகளுக்கு பஞ்சமாக இருக்கக் கூடிய இந்த காலகட்டத்தில் ரவுண்டப் அந்த ஏக்கத்தை திருப்திப்படுத்துகிறது. எப்படி இருந்தாலும் காவல்துறையின் மிருகத்தனத்தை மிகவும் வசீகரமான வேலைப்பாடுகளை பொருத்தி ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது இப்படம்.

- சண்முகப்பிரியா செல்வராஜ்.

Also Read: சிறந்த ஆசிய திரைப்படம் 'மாமனிதன்'.. - டோக்கியோவில் கோல்டன் விருதை தட்டி சென்ற தமிழ்ப்படம் !