Cinema
நடிகர் சல்மான் கானுக்கு வந்த கொலை மிரட்டல்.. பஞ்சாப் கும்பலுக்கு பயந்து துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி !
பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பாடகரான சித்து மூஸ் வாலா அண்மையில் கொல்லப்பட்டார். இவருக்கும் பிஸ்னோய் கும்பலுக்கும் இருந்த பகை காரணமாக அந்த கும்பல் இவரை கொன்றது.
பாடகர் சித்து இறந்த சில நாட்களிலே, பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு மர்ம கும்பல் கொலை மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், "சித்து மூஸ் வாலாவுக்கு ஏற்பட்ட கதி தான் உங்களுக்கும்" என்று இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்தது.
பின்னர் இது குறித்து சல்மான் கான், காவல்துறையில் புகார் அளித்தன் பேரில், இவர் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இவை ஒரு புறம் இருக்க, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, கடந்த ஜூலை 22-ம் தேதி மும்பை கமிஷனர் அலுவலகத்தில் நேரில் சென்று துப்பாக்கிக்கு லைசென்ஸ் வேண்டி விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது சல்மான் கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அவர் பயன்படுத்தி வரும் காரானது குண்டுகள் துளைக்காதவாறு புல்லட் ப்ரூப் கண்ணாடிகளைக் கொண்டு பொறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!
-
‘வந்தே மாதரம்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ அனைத்தும் சமம் தான்!” : சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு!
-
கர்நாடகாவால் மாசுப்படும் தென்பெண்ணை ஆறு : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி-க்கள் குற்றச்சாட்டு!
-
வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு தி.மு.க MPக்கள் கேள்வி!
-
‘இண்டிகோ’ விமானங்கள் ரத்து செய்வதற்கு காரணம் என்ன? : உண்மையை எடுத்துச் சொல்லும் முரசொலி தலையங்கம்!