Cinema
10 நாட்களாக உடல்நிலை மோசம்.. பிரபல இந்தி பாடகர் மரணம் - சோகத்தில் மூழ்கிய பாலிவுட் ரசிகர்கள் !
இந்தி திரையுலகில் பிரபலமான பாடகராக வலம் வந்தவர் பூபிந்தர் சிங் (82) . இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையை அணுகினார். அங்கே இவரை பரிசோதித்த மருத்துவர் இவருக்கு பெருங்குடல் நோய் இருப்பதாக கூறினர். இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல் மிகவும் மோசமானதால், மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு இவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். தற்போது பூபிந்தர் சிங் உடல் அவரது வீட்டிற்கு இறுதிச்சடங்கிற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
பூபிந்தர் சிங் ஒரு பாடகர் மட்டுமின்றி வயலின் மற்றும் கிட்டார் வாசிக்கும் திறமை கொண்டவர். பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப்பச்சன், தர்மேந்திரா, ராஜ்குமார் உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கும் இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!