Cinema
‘12 வருடத்துக்கு பிறகு உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அண்ணா’- அடுத்த படம் குறித்து சிம்பு நெகிழ்ச்சி வீடியோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மாநாடு' படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து அவர் நடிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் உரிமையை உதயநிதியின் 'ரெட் ஜெயிண்ட் மூவிஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சிம்பு நடிப்பில் பெரும் வெற்றிபெற்ற 'விண்ணத்தை தாண்டி வருவாயா' என்ற படத்தையும் 'ரெட் ஜெயிண்ட் மூவிஸ் 'நிறுவனமே வெளியிட்டது.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் அடுத்த படத்தை 'ரெட் ஜெயிண்ட் மூவிஸ்' நிறுவனம் வெளியிடவுள்ளது. இதற்கு நடிகர் சிம்பு, உதய நிதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்திற்குப் பின் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி" எனத் தெரிவித்துள்ளார். "விண்ணைத்தாண்டி வருவாயா" படம் பெற்ற பெரும் வெற்றியை போலவே இந்த படமும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தருணத்தில் சிம்பு வெளியிட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பகிர்ந்த அவரது ரசிகர்கள், சிம்பு மற்றும் உதய நிதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?