Cinema
"'பொன்னியின் செல்வன்' புத்தகத்தை எடுத்தபோது என் தாத்தா திட்டிட்டாரு.." - விக்ரம் பிரபு நெகிழ்ச்சி !
மணிரத்தினம் இயக்கத்தில், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், பிரபு, கார்த்தி, த்ரிஷா என பெரிய திரைப்பட்டாளமே நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் 'பொன்னியின் செல்வன்'. தமிழ் ரசிகர்கள் வெகு ஆவலுடன் காத்திருக்கும் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற நடிகர் விக்ரம் பிரபு, தனக்கும் - பொன்னியின் செல்வனுக்கும் உள்ள ஒரு நினைவுகளை பகிர்ந்தார். அவர் கூறியதாவது, "நான் சின்ன பையனா இருக்கும் போது ஒரு நாள் என் தாத்தா சிவாஜி, 'பொன்னியின் செல்வன்' புத்தகத்தை எடுத்துட்டு வரச் சொன்னாரு. நா அப்பதான் தமிழ் கத்துட்டு இருந்தேன். அப்போ எனக்கு தமிழ் 3rd Language (மூன்றாவது மொழி).. நான் போயிட்டு கஷ்டப்பட்டு தமிழில் பொன்னியின் செல்வன் புத்தகத்தின் தலைப்பை படித்து விட்டு எடுத்து வந்து கொடுத்தேன்.
ஆனால், அதற்கு ஒரு புத்தகம் தான் இருக்கு.. பொன்னியின் செல்வன் மொத்தம் 5 புத்தகம் இருக்குடா மடையா.. அத்தனையையும் எடுத்துட்டு வான்னு திட்டினாரு.. பொன்னியின் செல்வன் னு சொன்னாலே எனக்கு அதுதான் ஞாபகம் வரும்" என்றார்.
இவரது பேச்சு, அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில், விக்ரம் பிரபு 'கந்தமாறன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
- 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!