Cinema
கமலுக்கு பெரியார், அம்பேத்கர் சிலையை பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்..
'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தை பார்த்து படக்குழுவை அழைத்து பாராட்டிய நடிகர் கமல்ஹாசனுக்கு, உதயநிதி ஸ்டாலின் பெரியார், அம்பேத்கர் சிலைகளை பரிசாக வழங்கினார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹக் பாசில் என்று ஒரு திரை பட்டாளமே நடித்து வெளியான 'விக்ரம்' திரைப்படம் அமோக வெற்றி பெற்றது. சுமார் 450 கோடிக்கும் மேலாக வசூல் சாதனையை செய்த விக்ரம் படத்தின் வெற்றிக்கு, அதன் வெளியீட்டாளர் உதயநிதி ஸ்டாலினும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், கடந்த மாதம் வெளியான 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தைப் பார்த்த நடிகர்கள் பலரும் பாராட்டி வந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் படக்குழுவை அழைத்துப் பாராட்டியுள்ளார். அப்போது கமல்ஹாசனுக்கு உதயநிதி ஸ்டாலின் பெரியார், அம்பேத்கர் சிலைகளை பரிசாக வழங்கியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் உதயநிதி ஸ்டாலின், "#NenjukuNeedhi படத்தை பார்த்து குழுவினரை இன்று அழைத்து பாராட்டிய கமல்ஹாசன் சாருக்கு நன்றி. '#Vikram'-ல் உடன் பங்கேற்றதற்காக நினைவுப் பரிசு வழங்கினார். நாங்கள் பெரியார்-அம்பேத்கர் சிலைகளை பரிசளித்து மகிழ்ந்தோம்" என குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
SIR : “அதிமுக - பாஜக களத்துக்கு வராதபோதுதான் சந்தேகமாக இருக்கிறது...“ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!