Cinema
நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை: மருத்துவமனையில் இருந்து வெளியான ரிப்போர்ட் - முழு தகவல் இங்கே!
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வளம் வருபவர் விக்ரம். தனது வித்தியாசமான நடிப்பு திறமையால் சக நடிகர்களையே ரசிகர்களாக கொண்டவர்.
அண்மையில் நடிகர் விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ’மகான்’ திரைப்படம் அனைவர் மத்தியிலும் பாராட்டைப் பெற்றது. இதையடுத்து இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் நடிகர் விக்ரம் நடித்துள்ளார்.
இந்த படத்தில் விக்ரம் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்த கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியானது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் விக்ரமிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
மேலும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இந்த செய்திக்கு காவேரி மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு என வெளியான தகவலில் உண்மையில்லை.விக்ரம் முழு உடல் நலத்துடன் உள்ளார். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்" என தெரிவித்துள்ளது.
Also Read
-
“Climate Action, Clean Energy ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
பீகாரில் மகளிர் திட்டத்தில் முறைகேடு : ஆண்களின் வங்கி கணக்தில் வரவு வைக்கப்பட்ட பணம்!
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!