Cinema
நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது புகார் கொடுத்த சமூக ஆர்வலர்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். சமூக ஆர்வலரான இவர் நடிகை நயந்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரில், ரவுடிகளை ஒடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘ரவுடி பிக்சர்ஸ்’ என பெயர் வைத்திருப்பது ரவுடிகளை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது.
எனவே இந்த தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்களான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
'ரவுடி பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் 'நெற்றிக்கண்', 'கூழாங்கல்', 'சாணிக்காயிதம்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளது. மேலும் நடிகர் அஜீத்குமார் நடிக்கும் 62வது படத்தையும் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!